பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

313


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 313

- குடிபொன்றுதலும், குற்றங்கள் நேர்வதும் படிப்படியாக நிகழும்

நிகழ்வுகள் என்க.

- பொன்றுதல் குறைதல், கெடுதல், அழிதல்.

- பொன்றுவித்து என்னும் பிறவினைச் சொல், ‘பொன்றி என்னும்

தன்வினைச் சொல்லாக வந்தது வினைத்திரிபு.

பிறர் பொருளைக் கவர்தலால் நேரும் இழுக்கால், தன் குடும்பச் சீர்மை குன்றி, குடும்பநலம் அழிதலும்,

- இத்தகைய நடைமுறை அனைவரிடமும் நிகழ நேரின், அவர்சார்ந்த குடிமை நலமும் சிதைவுறுதலும் - இயல்பாகலின் பின்னர் நிகழப்போகும் அவற்றை முன் வைத்துக் கூறினார், என்க.

கஎஉ. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர். - 172

பொருள்கோள் முறை :

நடுவன்மை நாணுபவர், படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்.

பொழிப்புரை - நடுவுநிலையல்லாமைக்கு நாணுபவர், பிறர் பொருளைக் கவர்தலால் வருகின்ற பயன்களை மட்டும் விரும்பிப் பழியேற்படும் செயல்களைச் செய்யமாட்டார்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. நடுவன்மை நாணுபவர் - நடுவுநிலையல்லாமைக்கு நாணுபவர். - நடுவன்மை - நடுவுநிலை அல்லாத தன்மை. - நாணுபவர் உள்ளத்தால் வெட்கப்படுபவர். - நாணம் - மனவுணர்வு குறுகுதல். * - வெட்கம் உடலுணர்வு குறுகுதல்.

- கூச்சம் - உடல் நொசிவு.

- நாணம் - சிறப்பாகப் பெண்களிடத்தும், பொதுவாக ஆண்களிடத்தும்

இயற்கையாக அமைந்துள்ள ஒரு குறுகுதல் உணர்வு. - பெண்மைக்கு அது பெண்மைச் சிறப்பாகவும், ஆண்மைக்கு அது