பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

319


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 319

ஈடுபடுத்தி, நேர்மையாகப் பொருள் ஈட்டும் அறமுயற்சிகளில் செல்லுமாறு உய்த்தல். -

மெய்வாய்கண் மூக்கு செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை யவாவினைக் - கைவாய்க் கலங்காமல் காத்துஉய்க்கும் ஆற்றல் உடையான் - நாலடி:59 - என்றார் பிறரும். - புன்மை இல் காட்சியவர் - புல்லிமை இல்லாத நல்லறி வுடையவர். - புன்மை - புல்லியதன்மை.

- அது, விலங்குகள், பறவைகள் போல், பார்த்தது பார்த்தபடியே, கேட்டது

கேட்டபடியே, தான் கண்டவாறு காணுதல் 1849).

புன்மை இல் அவ்வாறு புல்லிய தன்மையில்லாத காட்சி. அறிவு. அறிவுக்குக் காணுதல் அடிப்படை என்க. - பார்த்தபடி, கேட்டபடியே இல்லாமல் அவற்றின் உண்மைத் தன்மையை

அறிதல்.

- திரிபின்றி அறிதல். என்னை?

‘எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’ - (355) ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ - - (423)

- என்றார் ஆகலின்.

- காட்சியை அறிவு என்று இந்நூலுள் பலவிடத்தும் கூறுவார்.

‘மருள்தீர்ந்த மாசறுகாட்சி’ - 199 “கடனறி காட்சி’ - 218 செயிரின் தலைப்பிரிந்த காட்சி - - 258 ‘மாசறு காட்சி’ . - 352 நடுக்கற்ற காட்சி’ - 654 துளக்கற்ற காட்சி’ – 699

- காட்சியை அறிவெனல் பண்டையோர் வழக்கு

திறப்படத் தெரியும் காட்சி - - தொல்:83 “செயிர்தீர் காட்சி - - தொல்:1059