பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 அ-2-14 வெஃகாமை 18

காசு. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெண்கிப்

பொல்லாத சூழக் கெடும். - 176

பொருள்கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை (உலக உயிர்கள் அனைத்துக்கும் வேறுபாடு காணாத அருள் உணர்வே பெரிதென விரும்பி, அதைப்பெறும் பொதுமை அறவுணர்வால் நின்று ஒழுகுபவன், பிறனுடைய பொருளைக் கவர விரும்பித் தீய வழிகளை எண்ணுவானானால், அவனும் (பலவகைத் துன்பச் சூழல்களால் நெருக்குண்டு கெடுவான்.

சில விளக்கக் குறிப்புகள் : -

1. அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் - உலக உயிர்கள் அனைத்துக்கும் வேறுபாடு காணாத அருள் உணர்வே பெரிதென விரும்பி, அதைப் பெறும் பொதுமை அறவுணர்வால் நின்று ஒழுகுபவன். அருள் வெஃகி (உலக உயிர்கள் அனைத்துக்கும் வேறுபாடு காணாத)

அருள் உணர்வே பெரிதென விரும்பி. - அருள் அன்பின் வளர்ந்த நிலை, - அன்பு - சிறப்பாக நெருங்கியாரிடத்தும் பொதுவாக மாந்தரிடத்தும்

காட்டும் நேயவுணர்வு (Love) .

- அருள் பொதுவாக மக்களில் ஏழையரிடத்தும், சிறப்பாகப் பிறவுயிர்களிடத்தும் காட்டும் இரக்க உணர்வு (கருணை (grace, mercy) அன்பு முதிர்தல் அருள். - .

‘அருளென்னும் அன்பின் குழவி’ - 757 என்பார் ஆசிரியர்.

அன்பு இன்மையின் அருள்பொருள் எண்ணார்’ - குறுந் 395.2 ஆற்றின்கண் நின்றான் (அருளை விரும்பி) அதைப் பெறும் பொதுமை

அறவுணர்வால் நின்று ஒழுகுபவன். - - அன்பு பழுத்து, அருளாய்க் கனிந்து, அறவுணர்வாய்ச் சுவை பொதுளும் என்க. எனவே, அன்புணர்வே அருளுக்கு அடிப்படை அருள் உணர்வே அறவுணர்வுக்கு அடிப்படையாய் அமைதல் காண்க.

இவ்வுண்மையை, நூலாசிரியர், . நல்லாற்றால் நாடி அருளாள்க’ - 242

என்பார். மற்றும், அருளுணர்வில்லாதவன் அறவுணர்வைக்