பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

331


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 331

குற்றப் பொருள் எனப் பறிக்கப்படும் பொழுது, அவனுடைமையாக ஏற்கனவே அவன் வைத்துள்ள சிறு செல்வமும் அதனுடன் சேர்ந்து பறிக்கப்பட்டு, இல்லாமலோ, குறைந்தோ போய்விடும் என்று உலகியல் உண்மை கூறலால், அதன் பின்னர் இது வைக்கப் பெற்றது என்க.

கஎசு. அறன்.அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந்து ஆங்கே திரு. - 179 பொருள்கோள் முறை :

அறன்.அறிந்து வெஃகா அறிவுடையார்த் திறன்அறிந்து ஆங்கே திரு சேரும்.

பொழிப்புரை : அறத்தின் தன்மை இதுதான் அல்லது. இதுதான் பொதுமையறம் என்று உணர்ந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுள்ளவரின் நல்திறத்தை அறிந்து செல்வம் அவரிடத்து வந்து தங்கும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. உயிரல்லாத பொருளை உயிர்ப்பொருளாக உருவகம் செய்து, நூலாசிரியர் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று என்க. ‘திரு சேரும் என்றது, மழை வரும் காற்று வீசும் என்பது போலும் ஓர் உலக வழக்காயினும் திறனறிந்து ஆங்கே சேரும் என்றது. பெருமை உருவகமாம் என்க. இதன் பாவியல் ஆளுமை முன்னர் (குறள் எண் : 167இல் காட்டப் பெற்றது. விளக்கம் ஆங்கே காண்க 2 அறன்.அறிந்து வெஃகா அறிவுடையார் அறத்தின் தன்மை இது தான், அல்லது இதுதான் பொதும்ையறம் என்று உணர்ந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுள்ளவரின். அறன் அறிந்து அறத்தின் தன்மையும், அதன் பொதுமை நலன்களும் அறிந்து; அல்லது இதுதான் பொதுமையறம் என்று உணர்ந்து, என்னை ?

‘மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு’ - .204 என்று அறங்கூறுவார் ஆகலின். ‘... ;- -

அறவுணர்வின் நன்மையும், பொதுமையும் அறிவாரே. அறிவுடையார்

ஆகலின் என்க. -