பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 அ-2-14 வெஃகாமை 18

வேண்டாமை என்னும் செருக்கு பிறன்பொருள் தனக்குத்

தேவையில்லை என்று எண்ணும் பெருமிதம். - அனைவரும் பொருளை விரும்பும் பொருள் உலகில், ஒரு பொருளை வேண்டாம் என்பதற்கு உள்ளத்தில் தெளிவும் துணிவும் பற்றற்ற தன்மையும் வேண்டும். - - இனி, பிறன்பொருளை வேண்டேன், விரும்பேன், அது தனக்குத் தேவையில்லை என்பதற்கு உள்ளத்தில் ஒரு செருக்கு உணர்வு, பெருமித உணர்வு தேவை. அவ் வுணர்வு உள்ளத்தின் செழுமையைக் காட்டும். எனவே, அதைப் பெருமிதம் என்றார். - இனி, அதையே சிறந்த செல்வம் என்றும் கூறுவார்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம்’ - 363 வேண்டும் என்பதற்கு எல்லையில்லை. எல்லையில்லாத் மனவுணர்வை எல்லைப்படுத்தியது வேண்டாமை என்னும் உணர்வு. எனவே அதனைச் செருக்கு (பெருமிதம்) என்றும் விழுச்செல்வம்’ பெருமைக்குரிய செல்வம் என்றும் பெருமைப்படுத்தினார் என்க. செருக்கு மிகையுணர்வு. - உள்ளத்தின் நிறையுணர்வு.

- இது வடமொழியில் கர்வம் எனப்பெறும் மற்று அகங்காரம் என்பது துய தமிழ்ச் சொல், ‘காரம் மிகுதி உள்ளத்தின் மிகையுணர்வு எனப் பொருள் பெறும்.

அது நன்மையை நோக்கியதாயின் பெருமிதம் எனப் பெறும். தீமையை நோக்கியதாயின் ஆணவம் எனப் பெறும்.

இனி, அது பொதுவாக, மனமயக்கத்தையும் மனநிறைவையும் மனக்களிப்பையும்கூடச் சிலவிடத்துக் குறிக்கும்.

பெருமிதம் குறித்த செருக்கு :

வேளாண்மை என்னும் செருக்கு’ - 612

நன்னயம் என்னும் செருக்கு - 860

‘பகைவர்கண் பட்ட செருக்கு’ – 878 ஆணவம் குறித்த செருக்கு :

செறுநர் செருக்கு அறுக்கும் - - 759

ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு’ - 844