பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

35


கொண்டவரும் அவையறிந்து ஆராய்ந்து சொல்லும், சொல்லின் தொகையறிந்த துய்மையவரும் (71) நம் பேராசான் என்க. சொற்களைப் பயன்படுத்துவதில் இவர்க்கு இவரே நிகர். இவர் போலவோ, இவர்க்கு நெருக்கமாகவோ, தண்டமிழ் நூற்பரப்பில் வேறு எவரையுமே காணுதற்கும் கருதுதற்கும் எவராலும் இயலாது என்க.

. இனி, அக் கேண்மையரை ஏன் மறவாதிருத்தல் வேண்டும் என்று கூறுகிறார்; ஏன் துறவாதிருக்கக் கூறவில்லை - என்றும் சிந்தித்தல் வேண்டும்.

- அறிவுரைகூறிக் குற்றம் களைந்து தெருட்டியவர் எவராயினும் அவர் ஆசிரியர் போன்றவராவர். ஆசிரியரோ அறிவுரை கூறியவரோ எப்பொழுதும் மாணவர் அருகிலேயே இருத்தல் முடியாது. இருத்தலும் கூடாது. மாணவர்தாம் அல்லது அவரால் திருத்தமுள்ளவர்தாம் அவரை மறவாது நினைவு கூர்ந்திருத்தல் வேண்டும். அவ்வாறு மறவாது நினைந்திருக்கும் நிலையில்தான், திருந்தியவர் இனிமேலும் அக்குற்றங்களைச் செய்ய முற்படார்; அவ்வாறு நினைந்திருக்கும் மனம் அதற்கு இடங் கொடாமல் இருக்கும். இனி, திருத்தமுற்றவரும் தம்மைத் திருத்தியவரைச் சந்திக்கவோ அவருடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளவோ விரும்பமாட்டார். அவரைப் பார்க்குந் தொறும், தாம் முன்னிருந்த நிலை நினைவுக்கு வந்து, அவர்க்கு இயல்பாகவே ஒரு நாணமும், தலைக்குனிவும் தோன்றுமாகையாலும், அது போலவே அவ்வுறவினர்க்கு அவர் முன்னிருந்த நிலையை நோக்கி ஓர் அறவிக்கட்டுத் தர்ம சங்கடம் தலையெடுக்கும் ஆகையினாலும், அவ் விருவரும் தொடர்பு கொள்வகை, இவ் வகையில் இருவருமே விரும்பார் என்க. -

- இந்நுண்ணிய மனவியல் உண்மைகளைக் கொண்டுதான் ஆசிரியர், அவர் கேண்மையைத் துறத்தலும் வேண்டா, துறவாமல் இருத்தலும் வேண்டா எனும் இருவிக்கட்டான நிலையில், அதை மறவாதிருக்க அறிவுறுத்தினார் என்க.

- மறவாதிருக்கக் கட்டளையிட்டது, அவர் மேலும் குற்றங்களைச் செய்யாதிருக்கவே, என்க. -

- இனி, இத் தொடரைப் போலவே நட்பாராய்தலில் மருவுக மாசற்றார்.கேண்மை, ஒன்றித்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு (800) என்னும் குறளிலும், மாசற்றார் கேண்மையும், ஒப்பிலார் நட்பும் வருகின்றன. அதிலுள்ள 'மாசற்றார் கேண்மைக்கு' இதுபோலும் பொருளைக் கொள்ள வியலாதவாறு 'மருவுக’ என்னும் சொல் தடையாக உள்ளது.ஏனெனில் 'மருவுதல்' தழுவிக் கொள்ளுதல் என்னும் பொருள் தொடர்பற்ற நிலையிருத்தலும், பின்னர்த் தொடர்பேற்படுத்துனும் புலப்படும் .அவ்வகையில் அவ்விரு