பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

37


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 37

தந்நலமும், கரவு நோக்கும் ஆகாவோ எனின் ஆகாவாம் என்க. என்னை? அதற்கு முன்பு அவர் துணையிருந்த தன்மையைப் புலப்படுத்தும் துப்பாயார் துணையாகியவர், ஆதரவாக விருந்தவர்) என்னும் சொல்லால், அவ்வுதவியை ஆதரவை . அவரே நல்கியதும், தாம் கேட்டுப் பெறாததும் புலப்படுத்துகின்றன.

- அவர் துணைநின்றது தாம் கேட்டுப் பெறாத நிலையில் நிகழ்ந்த தாகலின், அத்தந்நலத்திற்கும், கரவு நோக்கத்திற்கும் இடமில்லை என்று கூறலாம் என்க.

துப்பு ஆயார் . துப்பு ஆகியவர் அவரே துணைக்கு வந்தது புலப்படுகிறது. -

- இதனால் பெறுவாரினதும், உதவினாரினதும் நறுந் தன்மைகளை உணர முடிகின்றது என்க. மேலும் நன்றியறிதல் உணர்வை வலியுறுத்துவது மீண்டும் உதவிபெற்றுக் கொள்ளும் நோக்கத்திலன்று என்பது வெளிப்படை -

- இனி, இக்குறளுள் கூறப்பெற்ற இரண்டாவது கருத்தை யொப்ப, வேறுவேறு நிலைகளில் வேறுவேறு பொருள்களை விளக்கும் நோக்கத்துடன், நூலாசிரியர் கூறியுள்ளதும் இதனுடன் இணை வைத்துக் கருதத் தக்கது. -

- பொருட்பாவில், அரசியலில் பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரத்துள் கூறப்பெறும்

“உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல் - - 442 ‘பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் - - 450

- என்னும் குறள்கள் சிறப்பின் அரசர்க்குச் சொல்லப் பெறுவதேனும் பொதுவில் நட்புணர்வுக்கும் பொருந்துவனவே, அத்துடன் நன்றியறிதலுக்கும் இசைந்தனவே ஆகும். - - இனி, அதே LITa, அதிகாரத்துள் வரும்.

எல்லைக்கண் நின்றார் துறவர் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு 6

என்னும் குறளும் ஒருவகையில் இதே பொருளினதாகும்

அவ்வாறெனில் இது கூறியது கூறல் என்னுங் குற்றம் ஆகாதோவெனின் ஆகாது T6575, 776T? 7.’, . . . .”. . .

கூறியது கூறினும் குற்றம் இல்லை. வேறொரு பொருளை விளைக்கு மாயின்