பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11

தொடர்பானைவையே. இந்த உண்மைதான் மூளையியலிலும் மனவியலிலும் (Psychology) சொல்லப் பெறுகின்றனவே தவிர, முற்பிறவி நினைவுகளும் உண்மைகளும் அவற்றுள் பதிந்துள்ளனவாகவும், பதிவனவாகவும் அறியக் கூடவில்லை. இப்பொழுதைய பிறவியிலுள்ள மூளையிலும் மனத்திலும் மூளைதான் மனம் என்பது சரியில்லை; ஆனால் மூளைதான் மனத்தினது வேலையைச் செய்கிறது. இந்நூலுள் தேவையான இடத்துள் இவ் விரண்டிற்குமுள்ள வேறுபாட்டையும் தொடர்பையும் விளக்குவோம், இப்பொழுதைய நிகழ்ச்சிகள்தாம் பதியப் பெறுகின்றன என்பதும். அக்கருவிகள் அழியின் அவையும் அழிந்துபோகின்றன என்பதும் உண்மை. ஆனால் மனவுணர்வுகளும் ஆழமான அறிவுணர்வுகளும் விண்வெளி யணுக்களில் பதிவு பெறுகின்றன. என்பது ஒருவகை மெய்யறிவியல் உண்மையாகும். இதையும் பிறகோ நிறைவுரையிலோ விளக்குவோம்.

அவ்வாறிருப்பின் அறிவியலால் அவ்வுணர்வுகளை வெளிப்படுத்திவிட முடியும். பொருளறிவியல் (Material Science) என்பதும், உள்ளுணர்வு (Intuition) என்னும் மனவியலறிவு என்பதும்

வேறு வேறாயினும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டதன்று. எவ்வகையான

அறிவியல் பிரிவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையே!

மனவியலிலும் (Psychology) வெளிநிலை மனவியல் (ParaPshychology) என்றும் ஒருவகை சொல்லப் பெறுகிறது. ஆனால் இது இன்னும் தீர்க்கப் பெறாத முடிவுகளைக் கொண்டதாகவே கருதமுடியும் ஆனால், இந்நிலைகளாலெல்லாங்கூடப் பிறவித் தொடர் நிலைகள் இன்னும் உறுதி படுத்தப் பெறவில்லை என்றே அறிய முடிகிறது. நிகழ்பிறவி என்பதிலும் அதுதொடர்பான மெய்யறிவுண்மைகள் என்பதிலும்கூட அறிவியல் முழுமை பெற்றுவிடவில்லை. அறிவியல் வழியில் கண்டுபிடிக்கப் பெறவேண்டிய மாந்தவியல் கூறுகள் இன்னும் நிறைய உள்ளன. இருப்பினும் அவற்றுள் பிறவித் தொடர்பும் ஒன்றாக

விருக்கலாமோ என்று கருதுவதற்குங்கூட மெய்யறிவியலில் இடமில்லை

என்றே தோன்றுகிறது.

மெய்யறிவியல் என்பதும் உள்ளுணர்வு நிலையில் வெளிப்படும்

ஒருவகை உண்மைகள்தாமே தவிரக்கணக்கியல் முறையில் சரிபார்க்கப்

பெறும் முழு அறிவியல் என்று எவராலும் கூறிவிட முடியாது. அதற்கொரு சான்று. மெய்யறிவியலால் எல்லாம் வல்ல இறைப்பேராற்றல் உண்டு என்று சொல்ல முடியும்; அதைப் பிறர் உணரும்படி எடுத்துச் சொல்லவும் முடியும்; ஆனால் அஃது என்ன, எப்படி, எங்கு என்பனவற்றை எவராலும் சொல்லுதற் கியலாது.