பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 1

நோய்க்கு மருந்து தருவது நன்மை. தராமல் இருந்து விடுவது

நன்மையல்லாதது. நஞ்சு தருவது தீமை,

ஏற்கனவே நன்மை செய்த ஒருவர், நல்ல மனத்தவராக இருப்பதால், அவர் நன்மையல்லாததைச் செய்வதோ நன்மை செய்யாமலிருப்பதோ செய்வாரே தவிர தீமை செய்யும் மனத்தினராக உளவியல்படி இரார்

என்றார் என்க.

நன்றல்லாதது என்பதற்கு மணக்குடவரும், பரிமேலழகரும் தீமை என்றும், பரிதியார் குற்றம் என்றும், சொல் நுட்பமின்றிப் பொருள் தருவது பொருந்தா தென்க.

காலிங்கர் நன்மையல்லாதது என்றே பொருள் தருவர்.

இனி, பாவாணரும் பிறர் சிலருங்கூடத் தீமை என்றே பொருள் கொள்வர். அத்துடன் பாவாணர், நன்றி மறப்பது என்பதற்கு விளக்கம் கூறுகையில், நன்மை செய்ததை மறந்து ஈடான நன்மை செய்யாமையும் தீமை செய்தலுமாம் என்று ஆசிரியர் கருத்துக்கு மாறாகப் பொருள் தருவதும் பொருந்தாது என்க.

அடுத்து, ஈடான நன்மை செய்யாமை என்று அவர் கூறும் விளக்கத்திற்கும் அதிகாரப் பொருளும், ஆசிரியரது சொல்லும் இடந்தரவில்லை என்க.

அன்றே - என்றது பொழுது விரைவு நோக்கி அப்பொழுதே என்று

பொருள் தருவதாகும். -

4. இது, ஒருவர் செய்த நன்றியை மறவாது இருப்பதை வலியுறுத்துவதுடன், அவர் ஒரோவொரு நிலை நன்மையல்லாததைச் செய்யினும், அதை அவர் முன்னர் உதவிய தகைமை கருதிப் பொருட்படுத்தாமல் உடனே மறந்து விடுவதும் நன்மை பயக்கும் நடைமுறையாகும் என்பதையும் உடன் கூறினார் என்க.

- இனி, இக் கருத்தினும் ஒருபடி மேலே சென்று, நன்றியறிதலை அடுத்த குறளில் கூறுவார். - ---

க0க . கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

பொருள்கோள் முறை இயல்பு.