பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

47


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 47 போலும் துயர் தர வல்ல ஒரு தீமையையோ கெடுதலையோ செய்தாலும், அந்நிலையில் (அவர்மேல், அதன் பொருட்டு வருத்தம் கொள்ளாமல், தமக்கு

அவர் முன்செய்த நல்லுதவி ஒன்றினை நினைத்தமட்டிலேயே, அவர்மேல் நின்ற மனவெழுச்சி கெட்டுவிடும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. இது, 105-ஆம் குறட்பாவில் கூறப்பெற்ற செயப்பட்டார் சால்பின் வரைத்து’ என்னும் பாடற்பகுதியில் உள்ள ‘சால்பு’ எனும் நிறைகுணத்தின் உண்மைத் தன்மையையும், பின்னர், சான்றாண்மை’ அதிகாரத்துள் வரும் -

‘இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. -987

எனும் குறட்பாவில் உணர்த்தப்பெறும் சால்பின் செயல் தன்மையையும், நன்றியறிதல் உணர்வோடு ஒப்ப வைத்துக் கூறப்பெற்றதாகும். . 2. இனி, நட்பியலில், பழைமை அதிகாரத்துள், அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர்’ - 807 என்று வரும் குறட்பாவும் இத்துடன் நினைந்து மகிழத் தக்கதாம் என்க. - 3. கொன்றன்ன இன்னா செயினும் - தமக்கு முன்னர் உதவியவர், ஏதோ ஒரு நிலையில் மனத்தளவில் தம்மைக் கொன்றுவிட்டது போலும் துன்பம் தரும் தீமை அல்லது கெடுதல் செய்தாலும்.

- அடுத்த தொடரில் வரும் அவர் செய்த ஒன்று என்னும் குறிப்பால், முன்னர்த் தமக்கு உதவி செய்தவர் என்னும் கருத்து வருவிக்கப் பெற்றது. - கொன்றன்ன இன்னா என்பதற்குப் பலரும் கொன்றாற் போல், கொன்றால் ஒத்த இன்னாதவற்றை, பொல்லாங்கை என்று பொருள் தருவர். * * * . . .

ஆனால் கொன்றாற் போலும் மனத்துயரத்தை என்பதுதான் சரியான பொருளாகும் தம்மைக் கொல்லுங்கால் உள்ள நிலையை ஒருவர் உணரமுடியாது ஆக்லி* ன், ஆனால், அவ்வாறான் மன்த்துயரை மட்டும் ஒருவர் உண்ரமுடியும் அக்கொடுமைய்ைச் செய்ததற்குத் தம்மைக் கொன்றே இருந்திருக்கலாம் என்று சிற்சிலகால் உள்ளம் மருகுகின்ற துயரை உள்ளத்தளவில் பெறுவது இயல்வது. -

முன் உதவி செய்தவர், கொன்றன்ன இன்னா செய்வது எவரிடத்தும் என்றுமே நிகழ்வது இயல்பின்றாயினும், அவ்வாறு