பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11

இஃது, இவ்வாறான பல முட்டுப்பாடுகளைக் கொண்ட கருத்துகளுக்கு இடந்தருவதால், நாம் மேலே கூறிய பொருளாகிய, நன்மையை அழிக்கின்ற செயல் கருத்தும், அதற்கான எடுத்துக்காட்டுகளுமே இவ்வடிக்கு முற்றிலும் பொருந்துகின்ற கருத்துகள்

என்று கொள்க.

செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை - (ஆனால் தமக்கு ஒருவர்

செய்த உதவியை நினைவழிப்பார்க்குத் தம் வாழ்வில் உய்வதற்கு வழி அமைவதில்லை.

செய்ந்நன்றி கொல்லுதல் - என்பது, ஒருவர் செய்த உதவியை நினைவினின்று அழித்தலாகும். அஃதாவது மறந்து போதலாகும். அவ்வாறு மறத்தல் போல் புறக்கணிப்பாக மதியாது இருத்தலும் ஆகும் என்க.

- செய்ந்நன்றி கொன்றவற்கு உய்வில்லை என்பது, ‘அன்பி லதனை வெயில்போலக் காயுமே, அன்பி லதனை அறம் (77) என்றாற் போல, ஒருவகைக் காப்புக் குறிப்பே என்க.

மற்று, உலகியலில் இதற்கு நேர்மாறான விளைவுகளே உளவாதலைக் காணலாகும். எனவே, அறம் போன்றதோர் உணர்வு நடைமுறை, தானே இயங்குதல் தன்மை கொண்டது என்பதற்கு அடிப்படை அறிவியல் சான்று இல்லை என்க. இதனை,

‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்’ . - #69 என்னும் குறளாலும் உணர்த்துதல் காண்க. - எனினும் உளவியல் அடிப்படையில் இதற்கோர் உள்பொருள் உண்டாம் என்க. என்னை? -

- பிற நன்றி கொல்லுதல் புறத்தது எனின், செய்ந்நன்றி கொல்லுதல் அகத்தது என்க. - எனவே அதனை மனம் மறத்தல் இயலாது, ஒருவர் செய்த உதவியை அறிவு நிலையால், ஒருவன் மறத்தல் செய்தாலும், மனநிலையால் (மனச் சான்றால்) மறக்கவியலாதவனாய் நிற்பானாகையால் அம் மனச் சான்றே அவனை நினைவாற் காய்ச்சி வாட்டும் என்க. அவ் வாட்டுதல் அவனைப் படிப்படியாய் மெலிவடையச் செய்து, அவன் அறிவு முயற்சிகளில் ஈடுபட்டு உய்ய நினைத்தாலும், மன அழிவு அவனை உய்யாமற் செய்துவிடும் என்க. என்னை? -

மனம் ஒத்துழையாமை அறிவுப் பயனைக் கெடுக்கும் ஆகலின். இம்மனவியல் உண்மையை, ஆசிரியரே