பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - அ-2-8 நடுவு நிலைமை - 12

அ-2 இல்லறவியல் அ-2-8 நடுவு நிலைமை - 12

அதிகார முன்னுரை

நடுவு நிலைமையாவது, நடுவாக நிற்றல். அஃதாவது, சிக்கலுக்குரிய இரண்டு முறையீடுகளுக்கோ, இரண்டு தேர்வு நிலைகளுக்கோ, விற்றலுக்கும் வாங்குதற்குமான நிலையிலோ, ஒரம் சாராமல், மனத்தானும் சொல்லானும் செயலானும் நடுநிலையைக் கடைப்பிடித்தல். வெறுக்கையும் விழைவும் இன்றிச் சமநிலையாக ஒன்றை நோக்குவது. இன்னும், அது பொதுமையறம் கோடாமையுமாம். -

கோடுதல் ஒருபால் கோணித்தல் - சாய்தல். கோடாமை மனவுணர்வாலும் செயலுணர்வாலும் ஒருபுறத்தே சாய்ந்துவிடாமல், நிலைநிற்கும் தன்மை.

‘நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - 1 15

என்றும், - -

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து)ஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி - 1 18 என்றும், மனவுணர்வால் கோடாமையையும். -

‘வினைசெய்வான்

கோடாமை கோடாது உலகு” - 520

என்று, செயலுணர்வால் கோடாமையையும், சான்றோர்க்கு அணிகலன் ஆக்குவார்.