பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அ-2-8 நடுவு நிலைமை - 12

அடிப்படையாக உள்ளதெனலாம். இதில்தான் அதன் உணர்வு வடிவம் மாந்தவியலுடன் விளக்கம் பெறுகிறது. இறைமை உயிரினத்திற்கே நடுவு நிலையாக இயங்குகின்றதன்றோ?

இவ்வாறு, பொதுமைக்கும் பொதுவுடைமைக்கும் அடிப்படையாக உள்ள இவ் விறைமை சார்ந்த மனவியல் கோட்பாட்டை எவரும் சரிவரக் கடைப்பிடியாததால்தான், கோணல்மாணலுற்ற குமுகாய அமைப்பும், ஏற்றத் தாழ்வுற்ற பொருளியல் அமைப்பும், கரவும் வஞ்சகமும் உற்ற அரசியல் அமைப்பும் உலகெங்கணும் பரந்துபட்டுக் கிடக்கின்றன. அறம் திறம்பி மறம் மேலிட்டு, அல்லவை ஓங்கி, நல்லவை கூம்பியிருத்தற்கும் இவ்வுணர்வின்மையே கரணியமாம் என்க.

தானும் பிறனும், தாமும் பிறரும் ஒரே தன்மையர்தாம் என்றும், தனக்கும் பிறனுக்கும், தமர்க்கும் பிறர்க்கும் பொதுமையானவைதாம் இந் நிலமும் புலமும், வளமும் நலமும், வாழ்வும் சூழ்வும் என்றும், கருதற்கியலாத குறுகல் மனத்திற்கும் இந் நடுவுநிலை உணர்வு, கெடுவுற்றுக் கிடப்பதுதான் அடிப்படை ஏதுவாம் என்க.

எனவே, அது திரிந்தும் சரிந்தும் போயிருக்கின்ற மக்களிடத்து, அதனை மீட்டெடுத்து நிலை நிறுத்துவான் வேண்டி, இவ்வதிகாரத்தை, முன்னவற்றை யடுத்துச் சொன்னார் என்க. - இதனுள் அந் நடுவுநிலைமை பற்றிய விளக்கமும், அதன் தேவை, அதன் இன்றியமையாமை, அதன் பயன்பாடு, அதிலிருக்க வேண்டிய உறுதி, அஃதில்லாமற் போயின் வரும் தாழ்ச்சி, அதன் பெருமை, எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் அது பேணப் பெற வேண்டிய வழிமுறைகள் ஆகியன பலவும் பலவகையாகவும் கூறப் பெறுகின்றன.

ககக. தகுதி எனவொன்று நன்றே பகுதியால் * * பாற்பட்டு ஒழுகப் பெறின் -111

பொருள்கோள் முறை :

- பகுதியால் பால்பட்டு ஒழுகப் பெறின்,

தகுதி எனஒன்று நன்றே. -

பொழிப்புரை உறவினர். நண்பினர். பகைவர், நொதுமலர் பகையும் நட்பும் இல்லாத பொதுவர்). வேண்டியவர், வேண்டாதவர் தெரிந்தவர், தெரியாதவர். கற்றவர், கல்லாதவர், ஏழையர், செல்வர், இன்ன சாதியினர், இன்ன மதத்தினர். இளவர், முதுவர், ஆடவர், பெண்டிர் எனும் பலவகையான மக்கள் பகுதியினரிடத்தும், எவ்வகை வேறுபாடும், மாறுபாடும் இன்றிக்