பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

59


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 59

கடமையில் வழுவாது நின்று, கடைப்பிடித்து ஒழுகப் பெற்றால், நடுநிலை எனும் ஒன்று, மிகச்சிறந்த அறவுணர்வாகும். சில விளக்கக் குறிப்புகள் :

1. இது, மிகவும் பொருள் பொதிந்த குறள், மிக விரிவான மூன்று வகையான உலகியற் பொருள்களைப் பகுதி, பால், தகுதி எனும் மூன்று சொற்களால் நுண்ணிதின் உணர்த்தியுள்ளது, ஆசிரியரின் நுண்மாண் துழைபுலத்தைத் தெள்ளிதின் உணர்த்துகிறது, என்க.

பகுதியால் - என்னும் ஒரு சொல், பலவகையான மக்கள் பகுதியினரிடத்தும் எனும் பொருள்பட்டு, அம்மக்கள் பகுதியினரை, உறவினர், நண்பினர், பகைவர், நொதுமலர் பகையும் நட்பும் இல்லாத பொதுவர், வேண்டியவர், வேண்டாதவர், தெரிந்தவர், தெரியாதவர், கற்றவர். கல்லாதவர், ஏழையர், செல்வர், இன்ன சாதியினர், இன்ன மதத்தினர், இளவர், முதுவர், ஆடவர், பெண்டிர் எனும் பலவகையினராக விரித்தும் பொருள் கொள்ளக் கூடியது. ‘ஆல்’ என்னும் உருபு இடத்துப் பொருளில் வந்தது.

(எ-டு) அவனால் வெளிப்பட்டது.

அவனிடத்தில் வெளிப்பட்டது.

& *...*

} பட்டு - என்னும் சொல், கடமை, நேர்மை என்னும் பொருள்பட்டு, கடமையில் - நேர்மையில் நின்று என்று விரியும் தன்மையது.

தகுதி - என்னும் சொல்லும் தகவு என்னும் பொருள்தந்து நடுவு நிலையைக் குறித்தது. .

“தமிழரின் ஏமாளித்தனத்தினால் யோக்கியதை என்னும் வடசொல் வழக்கூன்றவே, தகுதி என்னும் தகுந்த தமிழ்ச்சொல் வழக்கு வீழ்ந்தது”

என்பார் பாவாணர் தம் மரபுரையில். 2 பகுதியால் பால்பட்டு ஒழுகப் பெறின் முன் கூறிய மக்கள் பிரிவினரிடத்தும் கடமையில் அல்லது நேர்மையில் வழுவாது நின்று, தகுதி என்னும் நடுவு நிலை உணர்வு கடைப்பிடிக்கப் பெற்று ஒழுகப் பெறின், 3. தகுதி என ஒன்று நன்றே - நடுநிலை எனும் ஒன்று மிகச் சிறந்த

அறவுணர்வாகும் . நன்மையும் தருவதாகும்.

இக் கூற்று பெறின் எனும் ஐயவுணர்வுக்கு ஒரு தெளிவாக நின்றது.