பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

63


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 63

- இவ் விலகியற் பேருண்மையை நூலாசிரியர் தம் பட்டறிவான் இப் பாடலில் உணர்த்திக் காட்டுகிறார். 2. தக்கார் தகவிலர் என்பது - ஒருவர் நடுவுநிலை உணர்வுள்ளவரா,

இல்லாதவரா என்னும் உண்மைநிலை.

- தகவு + ஆர் - தக்கார். - தகவு இலர் - தகவிலர் - நடுநிலையில்லாதவர். 3. அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவரும் தம்தம் வாழ்க்கையின் பின்னர் எச்சமாக விட்டுச்சென்ற நிலைகள் அல்லது பொருள்களால் கண்டுகொள்ளப்பெறும்,

. இதில் வரும் எச்சம் என்னும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் சிறுசிறு மாறுபட்ட பொருள்களைத் தந்துள்ளனர்.

- நுண்மையாக நோக்கின் அவர்கள் வேறுபடுத்திக் காட்டும் அத்தனை பொருள்களும் எச்சத்தின் பாற்படும் என்பதும் ஓர் உண்மையாகும். • ?

. மணக்குடவர், எச்சத்தை ஆரவாரத் தொழில் என்றார். இது, மிகையான எல்லை தாண்டிய விளக்கம்.

- பரிதியார், புதல்வரின் சற்குணம் என்றார். இதற்கும் கரணியம் உண்டு. - . .

- காலிங்கர், ஒழுக்கம்’ என்று பொருள் தருவார். எச்சம் செயற் பொருளையும் தருமாகலின். . . . . . . .

- இனிப் பரிமேலழகரோ, எச்சத்தாற் காணப்படும் என்னும் தொடருக்கு, அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும் என்னும் பொருள் கூறித்

தக்கார்க்கு எச்சம் உண்டாதலும், தகவிலார்க்கு இல்லையாதலும் ஒருதலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின என்று விளக்கமும் கூறியுள்ளார். - -

- இவர் இவ்வாறு கூறுதற்கு மதுதர்ம நூலும் ஒருவாறு காரணமாயிற்று எனலாம். அதன் மூன்றாம் பகுப்பில், .

- ‘முக்கியமாய் உத்தமமான விவாகத்தால் பிறக்கும் பிள்ளைகள் சாதுக்களாய் இருப்பார்க்ள. நிந்திக்கத் தக்க விவாகத்தாற் பிறக்கும் பிள்ளைகள் துஷ்டர்களாய் இருப்பார்கள் என்று கூறுப் பெற்றுள்ளது. இவர் உரைக்குச் சிறப்புரை விளக்கம் தந்த கோ. வடிவேலனார் அவர்கள், பரிமேலழகரின், ! -

‘தக்கார்க்கு எச்சம் உண்டாதலும், தகவிலார்க்கு இல்லை யாதலும் ஒருதலையாகலின் என்னும் தொடருக்கு