பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

71



- இனி, இவற்றுக்கெல்லாம் விடையாக அவர்கள் எமதர்மனையும் அவனுடை பதிவாளனாகச் சித்திரகுத்தனையும் காட்டுகிறார்கள்.

‘சித்திரகுத்தன்- இவன் சீவாத்மாக்கள் செய்யும் நல்வினை தீவினைகளைக் கிரமமாக எழுதி யமனுக்குக் கணக்குக் காட்டுவான்'

- மதுரைத் தமிழ்ப்பேரகராதி. 'சித்திரகுத்தனார் - The registrar of yama, who records the virtues and vices of mankind, and calculates the time when the lives of beings are to end, according to the destiny of each’ – Winslow’s, Tamil and English Dictionary.

. இந்தச் சித்திரகுத்தனின் கணக்குப் படி, ஒவ்வோர் உயிரினது எல்லை முடிவிலும், அதற்குரிய தண்டனையும், சிறப்பு நிலையும் எமவுலகிலேயே தரப்படுவதாக, ஆரியத் தொன்மக் கதைகளால் அறியப் பெறுகிறது. .

- இது வெறும் கற்பனைக் கட்டுக்கதையே யெனினும், அதன்படியே, உயிர்கள் தாம் செய்த தீமை நன்மைகளுக்கேற்பத் தக்க தண்டனையும் வெகுமதியும் அங்கேயே தரப்பெற்று, அவ்வவ் வினைகளுக்குரிய தீர்வுகள் முடிவுக்குக் கொண்டுவரப் பெறுகின்றன என்றால், அவ்வுயிர்களின் மறுபிறவியில் மீண்டும் முன்பிறவி வினைகளுக்கான நன்மை தீமைகள் எவ்வகையில் தொடரும்; அவ்வகைக் கணக்கு யாரால் கையாளப் பெறுகிறது. இனி அவ் வினைகளே தாமாகவே செயல்படுகின்றனவோ எனில், அதுவும் விளங்குமாறில்லை. பல்லாயிரக்கணக்கான பொய்புரட்டுக் கற்பனைக் கட்டுக் கோட்பாடுகளில் இதுவும் ஒன்றாகவே இருப்பது இதன்வழி நன்கு புலப்படுகிறது என்க.

- எனவே, பரிமேலழகர் முதலியோர், பொருளுரைக்குமாறு கேடும் பெருக்கமும் அவரவர் முற்பிறவி வினைப்பயன்கள் அல்லவென்றும் அவை அவரவர் அறியாமையாலும், சரியான முயற்சியின்மையாலும், குமுகாய அழுத்தங்களாலும் அடக்கி ஒடுக்கி வைப்பதாலுமே வருகின்றவை என்று அறிந்து அவர்கள் கருத்துகளை ஒதுக்குக

2. நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - நற்குணங்கள் நிறைந்த சான்றோர்கள் இயல்பாக வரும் இவ்வகையான இறக்க ஏற்றங்களால் தம் நெஞ்சத்துள்ள நடுவுநிலை என்னும் நேர்மை உண்ர்வில் திரிபடையாமல் இருப்பதே அவர்களது பெருமைக்கு உரியதாகும்.

தங்களுக்கு வரும் துன்பத்தின் தாக்கங்களாலும், இன்பத்தின் பெருக்கங்களாலும் அவர்கள் மனத்தினது நடுநிலை உணர்வு மாறுபடுதல் கூடாது என்றார். அதுவே அவர்களது பெருமைக்கு