பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அ-2-8 நடுவு நிலைமை - 12

அழகும் பெருமையுமாகும் என்றார். அணி அழகு பெருமையழகு. - பிறவுறுப்புகளுக் கெல்லாம் அணிகள் பொன்னும் மணியும் நெஞ்சத்திற்கு அணி நடுவுநிலை கோடாமையாம்.

- இயற்கையாக வரும் இத்துன்ப இன்ப நிகழ்வுகள் மாறுபடக் கூடியனவாகலின், அவற்றுக்குத் தக, தாமும் மாறுபடாமல் இருப்பதே தம் சான்றாண்மைக்குப் பெருமையாம் அல்லாவிடில் இழுக்காம் எனறாா எனக.

நல்லா றொக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும் அல்லன செய்தற்கு ஒருப்படார் - பல்பொறிய செங்கண் புலியேறு அறப்பசித்தும் தின்னாவாம் பைங்கண் புனத்தபைங் கூழ்’ - நீதிநெறி : 60

3. இது, முன்னர்க் கூறிய குறளினது எச்சத்திற்கு ஒட்டி உரைக்கப்

பெற்றதாகலின் அதன் பின்னர் இதை வைத்தார் என்க.

ககசு, கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்

நடுவுஒரீஇ அல்ல செயின். – it 6

பொருள்கோள் முறை :

தன் நெஞ்சம் நடுவுஒரீஇ அல்ல

செயின்யான் கெடுவல் என்பது அறிக. பொழிப்புரை இதுவரை நடுவுநிலைமையைக் கடைப்பிடித்து ஒழுகி வந்த) தனது நெஞ்சம், அந் நடுவுநிலை உணர்வைத் தவித்துவிட்டு, அஃதல்லாவற்றைச் செய்யத் துணியுமாயின், அப்பொழுதே யான் இனிப் படிப்படியாகக் கெட்டுப்போவேன் என்பதை அஃது அறிந்து கொள்ளட்டும். சில விளக்கக் குறிப்புகள் :

அறிவும் மனமும் வேறுவேறு என்பதை இக்குறளால் உணர்த்தினார்.

சென்ற விடத்தான் செலவிடாது தீதொரீஇ . . .

நன்றின்புரல் உய்ப்பது அறிவு - 422

- என்பாராகவின். .

2. ஒருவர் தாழ்ச்சியுறுவதற்கு அவர் மனமே முதல் காரணம் என்பதும்

இக்குறளால் அறியத்தக்கது.