பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

அ-2-8 நடுவு நிலைமை - 12

பேணாதவர்களின் தாழ்ச்சிகளையும் பலவாறாக உணர்த்திக் காட்டியவர், அந் நடுவுநிலைமைக்குக் காட்சியளவால் துலாக் கோலை உவமம் காட்டி அமைவு கூறினார் என்க.

சான்றோர்க்கு அணி - சால்பு நிறைந்த நடுநிலையாளர்களுக்குச் சிறப்பு.

அணி - அழகு. அது புறவழகைக் குறியாது அகத்தின் அழகைக் குறித்தது என்க. எனவே சிறப்பு ஆனது.

அணியப் பெறுவதால் அணியாயிற்று.

- சால்பு - நிறைகுணம், சால் மிகுதி, நிறைவு. (தவசத்தால் அல்லது நீரால் நிரப்பப் பெற்று நிறைந்திருப்பதால் கொப்பரை சால் ஆயிற்று)

- இனி, நிறைகுண நலன்களுக்கும், பண்பியல் நடைமுறைகளுக்கும் சான்றாக எடுத்துக் காட்டாக நிற்பதாலும், சான்றோர் (சான்றாளர்) என்று கூறுவதும் பொருந்தும் என்க.

ஆங்கிலத்தில் பிறர்க்கு நடைமுறை எடுத்துக்காட்டாக

பின்பற்றுவதற்கு உரியவராக இருப்பவர் examplery character எனப் பெறுவதையும் ஒத்து நோக்குக.

சமன்செய்து சீர்தூக்கம் கோல்போல் அமைந்து - நின்று,

பொருள்களின் நிறைச் சீர்மையை வரையறுத்துக் காட்டும் துலாக் கோலைப் போல் அமைந்து இயங்கி

- சமன் செய்தல் சம நிலையில் இருக்கச் செய்தல். - சமம் தூய தமிழ்ச் சொல்; சமன். - சீர்தூக்குதல் சீர்மையை நிறுத்துக் காட்டுதல்.

சீர்தூக்கும் கோல் - துலாக் கோல், - துலாக்கோல் எடை பார்க்கும் அளவி

துல் - துலை அளவு, சமநிலை, சமஅளவு.

- துல்லியம், துல்லிபம், சரிநிலை, மிகச் சமநிலை, நுண்ணியம். -

- துலா ஒன்றுக்குச் சரியாகச் சமமாக உள்ள தன்மை அதை அளவிடும் துலாக்கோல், நிறைகோல், .

துலாம் சமநிலை அளக்கும் கோல். நிறையளவி.

ஐந்து விசை - நூறு பலம் கொண்ட எடை அளவு. துலாக்கோல் தராசு என்னும் அரபுச் சொல் வழக்குக்கு வருமுன்னர் பெருவழக்காக இருந்த தமிழ்ச்சொல். . -

- இங்கு நடுவு நிலைக்கு எடுத்துக் காட்டாகத்துலாக் கோல் காட்டப்

பெற்றது.