பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

79


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 79

‘பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று’ - -j00

என்று அவர் பண்புடைமை அதிகாரத்துக் கூறுவதும் ஈண்டு எண்ணத்

தக்கது. -

நடுவு நிலைமை என்னும் பாலை வைக்கும் கலம் போன்றது மனம் என்று கொண்டால், அந்த மனம் தூயதாக இருக்க வேண்டுவது விளங்கும். -

4. இது, மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் (34) என்பதை

அடிப்படையாகக் கொண்டது, என்க.

கஉ0 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோற் செயின். - 120

பொருள்கோள் முறை :

பிறவும் தமபோல் பேணிச் செயின் வாணிகம் செய்வார்க்கு வாணிகம்.

பொழிப்புரை (பிறர்க்கு விற்கப் பெறும்) பொருள்களை (அவை விற்கப் பெறும் வரை) தாம் வாங்கும் பொழுது விலை, புதுமை, பயன்படும் தன்மை முதலிய பிறவும் எவ்வாறு தாம் விரும்புவன போலும், வாங்குவன போலும் இருந்தனவோ, அவ்வாறான நிலைகளிலேயே (அவற்றின் விலையை மிகக் கூடுதல் செய்யாமலும் தரம் குறையாமலும்) பேணிக் காத்து, (ஒர் அளவான ஊதியத்திற்கு) விற்றல் செய்யின், வாணிகம் செய்வார்க்கு, அதுவே நடுவுநிலைமை தவறாத வாணிகம் ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. உலக நிலையில், நடுவு நிலைமையுணர்வு ஒவ்வொரு மாந்தரிடத்தும்

இருக்க வேண்டிய பொதுமையுணர்வு ஆகும் என்பதுதான் ஆசிரியர் இவ்வதிகாரத்து முகாமைப்படுத்திக் கூறுவது ஆகும். o -

அத்தகைய நடுவுநிலையுணர்வு கேடும் பெருக்கமும் ஆகிய பொருளியல் தாக்கத்தும் மேம்பாட்டினுமே மாந்தனை அசைவுறச் செய்யும் என்பது உலகியலால் தெரியவரும் உண்மை. எனவே அந்நிலைகளிலெல்லாம் அவ்வுணர்வினை மன அசைவின்றிக் கட்டிக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதை முன்னுள்ள குறள்களில்

பலவாறாக வலியுறுத்தினார். *...