பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

83


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 83

அவ்வாறு செய்து விற்றல் செய்பவன். - வாணிகத்திற்கு ஊதியம் என்று பிறர் பொருள் கொண்டது இரண்டாம் மடிப் பொருளே. வாங்கி விற்றலால் கிடைக்கும் கூடுதல் வருவாய்.

பரி - தோண்டு. பரித்தல் - தோண்டுதல் - முதற்பொருள். பரித்தல் - பரிதல் - பரிசல் - மரத்தில் தோண்டி நீரில் மிதக்க விடுதல் - செல்ல விடுதல் - இரண்டாம் மடிப்பொருள்.

பரிதல் பரிசல் பரிக்கப் பட்டது தோண்டப் பட்டது. தசபோலி.

விரிதல் விரிசல்; வரிதல் வரிசல். - கரிதல் கரிசல், முரிதல் முரிசல், தூக்கு தூக்குதல் முதற்பொருள்

தூக்கிக் கட்டிய தொட்டில் இரண்டாம் மடிப்பொருள். - வணிகன் என்னும் சொல் வடக்கு (திராவிட மொழிகளில் பணிகன்

என்று முதலிலும் பணியா’ என்று பின்னரும் திரிந்தது.

- நடுவுநிலை திரியாமல் கடைப்பிடிப்பாகக் கொள்ளும் வாங்கி விற்றல் தொழிலே வணிகம் ஆகும்.

வேறு பிற தொழில்களிலும் நடுவுநிலை உணர்வு கடைப் பிடிக்க வேண்டுவது இன்றியமையாமை எனினும், வணிகத் தொழிலின்தான் அவ்வுணர்வு மிகுதியும் கடைப்பிடிக்க வேண்டுவது என்பதால், அத்தொழிலில் நடுவுநிலையுணர்வு எவ்வாறு கடைப்பிடிக்கப் பெறுதல் வேண்டும் என்பதை உலகியல் வழியாக உணர்த்தினார், என்க.

- முன்னர்த்துலாக்கோலைக் கூறியவர், இதில் அதன் செயற்பாட்டுத் தொழிலைக் கூறினார் என்க. .

5. நூல்களுள் வணிகர்க் குரியனவாக எட்டுக் குணங்கள் குறிக்கப் பெறுகின்றன. அவை வருமாறு:

1. தனிமையாற்றல் தனியாக நின்று இயங்கத் தெரிதல். 2. முனிவிலனாதல் - சினம் இல்லாதவனாக இருத்தல் 3. இடனறிந் தொழுகுதல் - நாடு, நகரம், ஊர் முதலிய பல இடங்களையும், மக்களின் தன்மை வேறுபாடுகளையும் அறிந்து, அவற்றுக்குத் தகுமாறு ஒழுகத் தெரிதல்,

4. பொழுதொடு புணர்தல் - பருவம், காலம், நேரம் இவற்றுக்கு இயைந்தவாறு இயங்கத் தெரிதல். -

5 உறுவது தெரிதல் - அரசியல் நிலையிலும், உலகியல் நிலையிலும், மக்கள் நிலையிலும், பொருளியல் நிலையிலும், தொழில் நிலையிலும்