பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

அ-2-8 நடுவு நிலைமை - 12

ஏற்படும், ஏற்படவிருக்கும் மாறுபாடுகளை முன்கூட்டி யறிந்து அவற்றுக்குத் தக ஒழுகத் தெரிதல்.

6. இறுவது அஞ்சாமை இழப்பு, பொருள்தேசம், விலையேற்ற இறக்கம், வரி, தண்டம் முதலியவற்றால் ஊக்கம், உறுதி இழக்காமை,

7 ஈட்டல் - பொருள் விற்பனையில் ஊதியம் ஈட்டவும், செல்வத்தைப் பெருக்கவும் தெரிந்துள்ளமை.

8. பகுத்தல் - முதலீடு, வருவாய், கொடை, குடும்பம், சுற்றம்

முதலியவற்றுக்குப் பொருளைப் பாகுபாடு செய்து, ஈடுபடுத்தத் தெரிந்துள்ளமை,

இது, நடுவுநிலை உணர்வை உலகியலில் கடைப்பிடிக்கும் முழுமை

உணர்வைக் கூறியதாகலின், இதை முன்னவற்றை அடுத்தும், அதிகார இறுதியிலும் வைத்துக் கூறினார்.