பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

87


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 87

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். - 997 - என்று பண்புடைமை அதிகாரத்துள் கூறுதல் காண்க. ‘இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய், - நாலடி :117

- மக்கட்கு அணிகலன் ஆவது அடக்கம் - பணிவில்சீர் மாத்திரை இன்றி நடக்குமேல் வாழும்ஊர் கோத்திரம் கூறப் படும்.’ - நாலடி : 241 - என்றார் பிறரும். . ‘- தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே இவர்க்குநாம் என்று’ - என்பதும், அது. தம்மையும் பிறரையும் ஒன்றாகக் கருதும் நடுவுநிலை உணர்வே அடக்கத்திற்கு அடிப்படையாகலின், அதன்பின் இது கூறுவார்.

கஉக. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும். ; : . . - 121

பொருள்கோள் முறை இயல்பு.

பொழிப்புரை : அடங்கி யொழுகுதலாகிய தன்னடக்கம் அஃது உடையவரை, மக்கள் மனத்திலே அமர்ந்து மறைந்தும் மறையாதவர்களாக நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் புகழ் பெற்றவர்களின் வரிசையுள் ஒருவராகக் கொண்டு சேர்க்கும். அடக்கமின்மை இவ் வுலகின் மறதிக்கு உள்ளாகிய கடந்த காலத்தின் திண்ணிய இருளில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. இஃது, அடக்கத்தினது நன்மையையும் அடங்காமையின் நன்மையின்மையையும் கூறியது. -