பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அ-2-9 அடக்கம் உடைமை 13

2. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்கியொழுகுதலாகிய தன்னடக்கம், இறந்தும் இறவாதவர்களாக மக்கள் மனத்தில் புகழுடன் அமர்ந்திருப்பவர்களின் வரிசையுள், அஃது உடையவர்களைக் கொண்டு சேர்க்கும்.

அடக்கம் - மனவடக்கத்தையும், அறிவடக்கத்தையும், மெய்யடக்கத்தையும் ஒருங்கே குறித்தது.

அமரருள் இறந்தும் இறவாதவர்களாக மக்கள் மனத்திலே புகழுடன் அமர்ந்திருப்பவர்கள்

அமர்தல் வீற்றிருத்தல். அமர்தல் உடையவர் அமரர். - அமரர் என்னும் சொல்லுக்குத் தேவர்கள் எனப் பொருள் கொள்ளுவது மிகு கற்பனை உருவகம் அவ்வாறு எவரும் இலராதலால் - இதற்கு மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் முதல் இக்காலப் பாவாணர் வரை அனைவரும் தேவர்கள் என்றே பொருள் கண்டனர். அஃது ஆரியவியலின் வழிவழிக் கற்பனையைப் பின்பற்றியது. தமிழியலில் அவ்வாறு ஒரு கோட்பாடு இல்லை.

- தமிழர் சமயங்களாகிய சிவனியத்தும் (சைவத்தும், மாலியத்தும் (வைணவத்தும் கூறப்பெறும் இத்தகு கற்பனைகளும் ஆரியவியல் தாக்கத்தால் ஏற்பட்டவையே. -

- மக்களுக்காகவே வாழ்ந்தும், பிற மிகுதிறன் கொண்டவர்களாக இருந்தும், மிகுபுகழ் பெற்று, மக்கள் மனங்களில் என்றும் நிலையாக அமர்ந்திருப்பவர்களையே அமரர் எனல் பொருந்தும்.

- மற்றும், அடங்கியொழுகும் இயல்பினார், மக்கள் நலங் கருதியும், பிற அறிவுத் துறைகளில் ஈடுபட்டும், செயற்கரிய செய்து வாழ்ந்து மறைந்த பெரியாராகச் சிறந்து விளங்கி நிற்றலும், மக்கள் மனங்களில் அவர்கள் என்றென்றும் இடங் கொண்டிருப்பதும் இயல்பாம் என்க. -நூலாசிரியர், இந்நூலுள் அமரர் என்னும் இச் சொல்லை இக்குறள் ஒன்றிலேயே பயன்படுத்தியுள்ளார். மற்று அவர், புத்தேள், புத்தேளிர் என்னும் ஒரு சார்புச் சொல்லை (58, 213, 234, 290, 966, 1323) Ul{{ இடங்களில் பெய்திருப்பதும், தேவர்களையும், தேவருலகத்தையும் அவை குறித்தனவா என்பதும் தெளியுமாறில்லை. புத்தேள் என்னும் சொல்லாய்வுக்கு இன்றுவரை தெளிவான விளக்கமேதும் எங்கும் எவரும் கூறிற்றிலர். இச் சொல் வேறு பல நூல்களுள்ளும் ஆளப் பெற்றுள்ளது, அக்காலத்து இஃது ஏதோ ஒரு கற்பனை நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப் பெற்றிருந்ததாகவே உன்னிக்கப் பெறும். இஃது ஒர் இடுகுறிப் பெயராக அக்காலத்துள் அனைவரும் அறிந்திருந்த ஒர் ஊராகவோ நாடாகவோ இருந்திருக்கலாம்; அங்கு வாழ்ந்திருந்த மிகு