பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

89


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 89

நாகரிகம் பண்பாடும் கொண்ட மக்களையும் புத்தேளிர் என்னும் சொல் குறித்திருக்கலாம் என்பதே இன்றைய அளவில் தரமுடிந்த விளக்கமாகும் என்க.

உய்த்தல் - கொண்டு செலுத்துதல். 3. அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் - தன்னடக்கம் இல்லாத தன்மை,

கடந்த காலத் திண்ணிய இருளில் கொண்டுபோய்ச் சேர்த்து விடும்.

அடங்காமை - தன்னடக்க மின்மை. ஆரிருள் - திண்ணிய இருள். உருவகமாய்க் கடந்த காலத்தைக் குறித்தது.

முற்காலத்து இவ்வுலகின்கண் தோன்றி வாழ்ந்து மறைந்த பல்லாயிரங் கோடி மக்கள், கால இருளுள், கால வெள்ளத்துள் என்பதும் வழக்கு அச்சு, அடையாளமின்றிப் புதையுண்டு போயினர். அவ் வரலாறு இல்லாத மக்களுள் ஒருவராக அடக்க மில்லாதவர் மாய்ந்து மறைந்து விடுவர் என்பது ஆசிரியர் கருத்தாம் என்க.

- பெரும்பாலும் மக்கள் மனத்துள் இடங்கொண்டு பெரும்புகழ் பெற்று மறைந்தும் மறையாத சான்றோர் பலர் அடக்கமுடையவராயிருந்து ஆற்றற்கரிய அருஞ்செயல்களைச் செய்தவர்களாகவே இருப்பதை வரலாறு உணர்த்துகின்றது.

அறிஞர்கள் அடக்கமில்லாதவர்களாக இருந்திலர் - என்பது. அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு’ - என்னும் பாடலால் விளங்கும். - இனி, அறிவிருந்தும் அடக்கம் இல்லாதவரை அறிவில்லாதவர் என்றே ஆசிரியர் குறிப்பதும் காண்க .

ஒதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையில் பேதையார் இல் - 834 - இனி, ஆரிருள் என்பதனை, மணக்குடவரும், பரிதியும், காலிங்கரும், பரிமேலழகரும் - நரகம் என்றே பொருள் கொண்டனர்.

இதுவும் இல்லாத மிகு கற்பனையே; ஆரியவியலே. தமிழியலில் 1.நரகம் என்று கூறப்பெறுவதில்லை. .

- பாவாணரும் இருளுலகம் என்று பொருள் கூறி, இருளுலகமாவது நரகம் என்று விளக்கம் செய்வது வருந்தத் தக்கது; அவரின் சமயக்