பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

அ-2-9 அடக்கம் உடைமை 13

கொள்கை சான்றது. இனி, இவ்வாறு கூறியவர், அவ்வளவின் அமையாது. பண்டைக் காலத்தில் இருட்டறையுள் அடைப்பதும் ஒருவகைத் தண்டனையாயிருந்தமையின், நரகம் இருளுலகம் எனப்பட்டது என்றும் துணைவிளக்கமும் கூறி, அவரின் தவறான கருத்தை மெத்தனப்படுத்துவார். இதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதோ, தெளிவான கருத்தோ அன்று. -

- அடக்கமின்மை ஒருவேளை தண்டனைக்குரிய குற்றம் செய்தற்கு ஏதுவாக அமையலாமேயன்றி, அஃதே ஒரு தண்டனைக்குரிய குற்றமன்று.

- ஆனால், அடக்கமில்லாதவர் எதுவும் செயற்கரிய செய்தல் இயலாது போதல் இயங்கியல் காரணம், செயற்கரிய செய்தல், அமைந்து செய்யும் அடிப்படை கொண்டதாக இருப்பதே. அதனால், அவர் வாழ்வும் செயலும் மக்களால் நினைவு கூரத்தக்க அளவு பெருமை பெறுதலும், மக்கள் மனத்தில் அத்தகையர் அமர்வதும் இல்லாமல், கால இருளில் மங்கி மறைந்து போதலும் இயற்கையாம்

  1. Tr. -

4. இனி, நூலாசிரியர் நரகம் பற்றிய கருத்துடையவராக இருப்பது. அவர்,

நூலுள் 255, 335, 919 ஆகிய மூன்று இடங்களில் பயன்படுத்திய அளறு’ என்னும் சொல்லால் தெரிய வருகிறது. ‘அளறு’ என்பது அழுந்திய சேற்றுக் குழம்பைக் குறித்தாலும், தமிழ் நூல்களுள். நிரயம் என்னும் நரகத்திற்கு ஒர் உருவகமாகவே குறிக்கப் பெறுகிறது. நிரயம் என்னும் ஒரு சொல்லும் நரகத்தைக் குறிப்பதற்கே பயன்படுத்தப் பெறகிறது. ஆனால் இச்சொல் இந்நூலுள் எங்கும் ஆளப் பெறவில்லையேனும், வேறு தமிழ் நூல்களுள் ஆளப் பெற்றிருப்பதும்

அறிவியல் அடிப்படையிலோ, மெய்யறிவியல் அடிப்படையிலோ, துறக்கவுலகம் சொர்க்கம்), நிரயவுலகம் (நரகவுலகம்) என்பன அறவே இல்லை என்பதே தெளிவு. தமிழ்ச் சமயங்களும், ஆரிய வரவுக்கு முன்னரே தோன்றியிருப்பினும், பிற்காலத்துத் தமிழ் மொழியுள் ஆரியங் கலந்தது போலவே, தமிழ்ச் சமயங்களுள்ளும் ஆரியங் கலந்தமை மறுக்க வியலாததாம் என்க. . . . . -. -- .

- எனவே, வேதமதக் கொள்கைச் சார்பினதான மோட்ச, நரகக் கொள்கை

தூய தமிழியலுக்குப் பொருந்தாததே என்றும், அதனை முழுமையாகவோ, பகுதியாகவோ நூலாசிரியர் ஒரோ விடங்களில் குறித்திருப்பினும் அஃது அறியாமையே அல்லது மூடநம்பிக்கையே அல்லது ஆரியத்தின்

பாற்பட்ட அடிமைத் தன்மையே என்று அறிவினார் கருதுதல்

வேண்டும். . . . .