பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அ-2-9 அடக்கம் உடைமை 13

- ஆக்கம் (ஊதியமாம் தருவது மூலமுதல் (Capital). எனவே, அடக்கத்தைத் தனக்குள்ள முதலீட்டுப் பொருளாகக் காத்துக் கொள்க என்றார். - பொருளை, உறுதிப் பொருள் என்பார் பரிமேலழகர். அறம், பொருள், இன்பம் எனும் உறுதிப்பொருள் மூன்றனுள் பொருளும் உறுதிப் பொருளாயிற்று என்பது அவர் கருத்து. - அதுவும் பொருள் மதிப்பினதே சிறப்பில்லை.

ஆக்கம் என்பது மேல் ஆகிவரும் பொருளாக நின்று ஊதியத்தைக் குறித்ததாகலின், பொருள் என்பதை மூல முதலீடாகக் கொள்ள வேண்டுவது இயல்பாயிற்று. மூல முதலீட்டை எவரும் செலவழியார் ஆகலின் அஃது இறுதிவரை உறுதி பயப்பதுபோல், அடக்கமும் இறுதிவரை உறுதி பயப்பதாகும் என்றலான் என்க. இதற்குக் காலிங்கர் பொருள் விளக்கம் தருகையில், அடக்கம் உடைமையாய்க் கொண்டு உலகத்தில் யாவரும் தத்தம் குல மரபுக்குத் தக்க ஒழுக்கத்தினால் ஒழுகுதலே சிறந்தது என்று கூறுவது ஆரியச் சார்பானதும் மிகையானதும் என்க. அது தேவையின்று எனக் கூறி விடுக்க, 3. இது, முன்னர்க் கூறிய அடக்கத்தைக் காத்து ஒழுக வேண்டிய இன்றியமையாமையைக் கூறலின் அதன் பின்னர் வைக்கப் பெற்றது.

கஉங். செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்காப் பெறின் - 123

பொருள்கோள் முறை :

அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின், செறிவறிந்து சீர்மை பயக்கும். பொழிப்புரை : ஒருவர் தமக்குற்ற அறிவுணர்வை முற்றாக அறிந்து கொண்டு, அதன்வழி அவர் அடங்கியொழுகுவாராயின், அவ் வடக்கப் பண்பு, பிறர் அறிந்து, அவர்க்கு ஏற்ற பெருமையையும் புகழையும் தரும்படி செய்யும்.

சில விளக்கக் குறிப்புகள் : - -

1. சென்ற குறளில் அடக்கம் ஆக்கம் தருவது, எந்நிலையில். எவவாறு

என்பதை இதில் விளக்கினார். - 2. அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் ஒருவர் இயற்கையாகத் தமக்குற்ற அறிவு உணர்வை முற்றாக அறிந்து, அதன் வழி அவர்