பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

97


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 97

- இதில், தோற்றம் என்பதற்கு மனக்குடவர், பரிமேலழகர் இருவரும் “உயர்ச்சி என்றும், பரிதியார், பெருமை என்றும் பொருள் கூறுவர். இற்றைப் பாவாணரும் பிறர் சிலருங்கூட உயர்ச்சி என்றே பொருள் கறுவாா.

- இனி, உயர்ச்சி என்றால் எது? உயரமா, மேன்மையா? அவருடைய ‘உயரம் உறுதியாக மலை உயரத்தைவிட இருக்கவியலாது. எனவே உயர்ச்சி, உயரமன்று. - - இனி, மேன்மை என்றாலோ, பிறவென்றாலோ அப் பொருளைத் தெளிவாகக் குறிக்கவில்லை. எனவே அவர்களின் உரை ஐயப்பாட்டிற்கு உரியவாறு தெளிவின்றியே உள்ளது என்க. - இனி, அவர்கள் கூறும் உயர்வு, சிறப்பாகத்தான் இருக்க முடியும் என்பதுகூட, அவர்கள் எடுத்துக்காட்டுக்குக் கூறும், மலையினது உயர்ச்சியினும் மிகப் பெரியது என்று முன்னைய இருவரும், பாவாணரும் கொள்ளும் பொருளில் அடிபட்டு விடுகிறது. - எனவே அவர்கள் உயர்ச்சி என்று கூறுவது உயரத்தையே என்றாகி

விடுகிறது. - - இஃது எவ்வளவு பெரிய அறியாமை அல்லது தெளிவின்மை என்று

அறிவினார் துணித்தறிக. - எத்தகைய ஒருவனின் உயர்ச்சி அல்லது உயரமும், மலையை விட மிக உயர்ச்சியாக இருக்க முடியுமா என்பதற்கு அவர்கள்தாம் விடை கூறுதல் வேண்டும். - * - இதிலிருந்து என்ன தெரிகிறது எனின், சிக்கலான பொருள் தரும் ஒரு சொல்லுக்கு முன்னுள்ள உரையாசிரியர்கள் என்ன பொருளைக் கண்டு கூறினரோ, அதே பொருளை அதே சொல்லில் சொல்லி விடுதலே தமக்கும் தக்கது அல்லது எளிது அல்லது சிக்கலிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவுவது என்பதே, ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தமிழ்ப் புலவோர் கொண்ட கொள்கை என்று ஆகிவிடுகிறது. - - இதில் மணக்குடவர், இன்னொரு கொடுமையையும் கூறுகிறார். - அது, நிலையில் திரியாது என்பதில் உள்ள நிலை என்பது, வன்னாச்சிரம

தன்மம், . அஃதாவது, வர்ணாச்சிரம தர்மம் என்று, மனுதர்ம நூலுக்கு வேறு நம்மை இட்டுச் செல்கிறார். அதனால், இவரும் ஓர் ஆரியப் பார்ப்பனராகவோ, அல்லது அடிமையாகவோ இருக்கலாகும் என்க. -இனித் தோற்றம் என்பதற்குச் சரியான பொருள் விளங்கித் தோன்றுதல்

அஃதாவது முன்னேறி நிற்றல் என்பதே என்க. என்னை? . .