பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

99



6) பகைவர்தம் குடும்பத்தவரிடை - அவர்தம் துணைவியரிடையே தன் துணைவியையும், அவர்தம் பிள்ளைகளிடையே, தன் பிள்ளைகளையும் முதலில் நட்புக் கொண்டு உறவாடச் செய்து, படிப்படியே அதனை வளர்த்துப் பகைப் பூசல்கள் சிற்சிறிதா மாய்ந்து போகச் செய்தல்.

7) பகையாளருடன், ஏதும் ஒரு பொது நிகழ்வில், காலமும் இடமும் பார்த்து, ஒப்புரவாகி இணைந்து செய்ய முயலுதல்.

8) பகையாளரைப் பற்றிய குற்றங்களைப் பற்றித் தங்களுக்குப் பொதுவான நண்பர்களிடம் சிறிதும் உரையாடாது, அவர்தம் நற்குணங்களைப் பற்றியே மேலோக்கமாகப் பேசிவருதலும், அத்தகைய பேச்சுகள் பகையாளர்தம் செவிகளுக்கு எட்டுமாறு செய்தலும் வேண்டும்.

- இன்னோரன்ன முயல்வுகளான் பகையை நட்பாகக் கொண்டு ஒழுகும் பண்பு நிலைகளைப் போற்றி, அப் பகையினால் வரும் தாக்கங்களினின்று ஒருவாறு தப்பித்துக் கொள்ளலாம், என்க.

2) வினைப்பகை வியாது பின்சென்று அடும்: ஆனால், தீய செயல்கள் என்னும் பகை, அழியாமல், அவற்றைச் செய்தவரைத் தொடர்ந்து சென்று தாக்கும்.

வினைப்பகை : தீய செயல்கள் என்னும் பகை

- இவ்விடத்துத் தீய செயல்களே செய்தவனுக்கு ஒரு பகையாக நின்று இயங்குகின்றது.

- இதுவும் ஓர் உருவகமே - இங்குத் தீய செயல்கள் ஓர் உயிருள்ள பொருளாக உருவகித்துச் சொல்லப் பெறுகிறது என்பதை நாம் கவனித்தல் வேண்டும்.

- தீயசெயல் ஒருவன் செய்யும் வினைகளிலேயே அழியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று தாக்குகின்றது. ஆகையால், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் அதனை, அவர்தம் மதவியல்பு 'தீவினை'யாக - அஃதாவது ஒருவினைப் பயனாகக் கொள்கின்றனர். அதுவும் ஒர் உருவகமே ஆனாலும் அதை அவர்கள் இலக்கிய வகையில் ஓர் உருவகமாகக் கொள்ளாமல், மதவகையில் ஒரு தீவினைப்பயனாகக் கற்பித்துச் சொல்கிறார்கள் என்பவற்றில் உள்ள அடிப்படை வேறுபாட்டை அறிவினார் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

வியாது: அழியாமல்,

இச்சொல்லுக்கும் மணக்குட வரும்.

பரிமேலழகரும் ‘நீங்காது’ என்று பொருள் கொண்டு,