பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

101



'சுடர்வி வாகைக் கடிமுதல் தடிந்த
தார்மிகு மைந்து’ -பதிற்: 40:15-16

'இறுவரை வேங்கை ஒள்வி சிதறி' - கலி: 41:11

'சிறுபீர், வீரர் வண்ணம் கொண்டன்று' - அகம்: 57:13

- 'வீ'யின் இரண்டாம் நிலைச்சொல்

‘பெரும்பெயல் தலைஇய வீஇத் தாங்கு’ - குறுந்: 165:4

'வீஇ' எனும் வடிவம் 'வீந்து' வீயும், 'வீயா' என்று வளர்கிறது.

‘தீம்புனல் தெரிதர வீந்து உக்கா அங்கு’ - குறுந்: 149:4

‘மாசுணம் வீயும் நீள் அத்தம்’ - திணை.மா: 75:3

'வேங்கை வீயா மென்சினை வீஉக’ - குறுந்: 247 : 5

'இனி', 'வீயா' என்பது 'அழியாத' 'இறவாத' என்னும் பொருள்களைத் தரும்

'நீங்குதல்', 'தவிர்தல்', 'ஒழிதல்', 'அழிதல்' - என்னும் பொருள்களும் தரும்.

‘வீயா யாணர் நின்வயி னோனே’ - பதிற்: 35:10; 36:1

‘வியா விழுப்புகழ்’ - அகம் : 135 : 1

‘வியா விழுமம் தரும்’ - குறள் : 284

‘வியாது, உடம்பொடு நின்ற உயிரும் இல்லை' - புறம்: 363:8

'வியாச் சிறப்பின் வேள்வி' - புறம்: 15:20

‘வியாது பரந்தநின் வசையில் வான் புகழே' - புறம் : 168 : 22

- எனவே, இவ்விடத்து 'வியாது' என்பதற்கு 'அழியாது' என்னும் பொருளே மிகப் பொருந்துவதாம் என்க.

- பின் சென்று அடும் : செய்தவனைத் தொடர்ந்து சென்று தாக்கும்.

அடும் - தாக்கும் .

- கொல்லும் என்பது அத்துணை பொருந்தாது.

- 'தாக்குதல்' அகவழியாக மனத்தாக்கத்தையும், புறவழியாக அரசுத் தண்டத்தையும் ஏற்படுத்தும்.

‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ - 297

- என்பது, அகத்தாக்கம்.

'கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல்' - 550