பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

அ-2-18 ஒப்புரவறிதல் 22



இஃது, ஆரியவியற் சேற்றில் அழுந்தக் கால் ஆழப் புதைத்துக் கொண்டு, அதனின்று மீட்டடிவைக்க அறியாத உணர்வினால் எழுதப் பெற்றதாகலின், அதனை விடுக்க

மற்று, மொழியாய்வறிஞர் பாவாணரும், தம் தமிழ்மரபுரையுள்,

'ஒப்புரவறிதல்' - 'அஃதாவது, இல்லறத்தாருட் பெருஞ்செல்வரானவர் செல்வருள் உயர்ந்தோரான வள்ளல்களைப் பின்பற்றி யொழுகுதலின் கண், 'வளவனாயினும் அளவறிந்தளித்துண்' என்ற நெறிமுறைப்படி தத்தம் அளவறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதல். உயர்ந்தோரான வள்ளல்களை யொத்தொழுகுதலும் அவரவர் செல்வத்தின் அளவறிதலும் பற்றி ஒப்புரவறிதல் எனப்பட்டது. இது பெருஞ்செல்வர்க்குரிய உலக நடையாம் என்று உணராது கூறினார், என்க.

திருவள்ளுவப் பேராசானின் தமிழியல் திருவுளப் பாங்கில், வெளிப்பட்டுப் போதந்த ‘உலகப் பொதுமைச் சமநிலை உணர்வு இஃது' என்பது, இவ்வதிகாரத்துள் வரும் குறட்பாக் கூற்றுகளினாலும் நன்கு உணரப் பெறலாகும் என்க.

இனி, ஒப்புரவறிதல் என்பது 'இம்மைப் புகழ் கருதும் தாளாண்மை உணர்வு' மட்டும் அன்று. அஃது, ஈகை அதிகாரத்தின்கண் வெளிப்பட்டு நிற்பதை, அங்குக் காணலாகும். அதற்கு 'ஈகை'யதிகாரத்தையடுத்துப் 'புகழ்' அதிகாரம் வைக்கப் பெற்றிருப்பதே பெரும் அகச்சான்று ஆகும். எனவே, அது குன்றக் கூறலும், மயங்கக் கூறலும் ஆகும்.

அதுவேபோல், 'தத்தம் அளவறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதலோ', இது பெருஞ்செல்வர்க்குரிய உலக நடையாம் என்பதோ அன்று. அதுவும் மாறுகொளக் கூறலும், மனங்கோள் இன்மையுமாகும்.

எனவே, ஒப்புரவறிதல் என்பது, வெறும் ஈகையுணர்வு மட்டுமன்று. தன்னைப் பிறரொடு ஒப்பவைத்துக் கண்டு தம்மினும் எளியார்தம் பொருளியல் தாழ்வுநிலையைச் சமநிலைப் படுத்திப் பொதுமைநிலை நிரவவும் நிறுவவும் வழிகாண்டது. ஆகும்.

இதனை, இவ்வதிகாரத்து வரும் முதற்குறளிலேயே ஓர் உவமை வழியான் புலப்படுத்திக் கூறுவது, ஆண்டுக் காணத்தக்கது.

இஃது, 'இலன் என்று தீயவை செய்யற்க' (205) என்றும், 'தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்' (209) என்றும், முன்னர் தீவினையச்ச அதிகாரத்துள், 'பொருள்நிலைத் தாழ்வே தீவினைகளுக்கு அடிப்படை' என்று, முற்றவுணர்ந்த மெய்யுணர்வினால் கூறியதை அடுத்து, இப் பொருள்வழிச் சிந்தனையில்