பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அ-218 ஒப்புரவறிதல் -22


‘பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ - நற்: 99:6-7

‘மாக்கடல் முகந்து மணிநிறத்து அருவித்
தாழ்நீர் நனந்தலை அழுந்துபடப் பாஅய்
மலைஇமைப் பதுபோல் மின்னி
சிலைவல் ஏற்றொடு செறிந்த இம்மழை’ - நற்: 112 : 6-9

‘வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான்பிறர் படைமயக் குறினே’ - புறம் : 142 : 4-7

‘மாரி ஈகை மறப்போர் மலையன்’ - புறம்: 158 : 7

'ஒவாது ஈயும் மாரி வண்கை
கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி’ - குறுந் : 91 : 5-6

‘ஆர்அரண் கடந்த மாரி வண்மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை’ - குறுந் : 190 : 2-3

'மண்ணுடை ஞாலம் புரவுஎதிர் கொண்ட
தண்ணியல் எழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவது ஆயினும்
சேரலாதன் பொய்யலன்' - பதிற்று: 18 : 9-12

‘மாரி வண்மகிழ் ஓரி’ - குறுந்: 265 : 7

'அடுபோர் ஆனா ஆதன் ஒரி
மாரி வண் கொடை’ - புறம்: 152 : 4-5

'இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவுஎதிர்ந்து தொகுத்த யானைபோல
உலகம் உவப்ப ஒதரும்
வேறுபல் உருவின் ஏர்தரும் மழையே!' - நற்: 237 :7-10

‘கடும்பகட்டு யானை நெடுமான் அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசைசேண் விளங்க
தேர்வீக இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே!' - நற்: 381 :7-10

3) கடப்பாடு கைம்மாறு வேண்டா : (அதுபோலவே) (இங்கு மேனிலையில் உள்ளவர்கள், அவ்வாறில்லாத ஏழை எளிய மக்களுக்குச் செய்யும்) பொதுமை நலக் கடமை அறங்களும் கைம்மாறு கருதப்பட