பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அ-218 ஒப்புரவறிதல் -22


அது.

‘பலநாள் அறத்தொடு வருந்திய அல்குதொழில் கொளீஇய
பழமழை பொழிந்த புதுநீர் அவல
நாநவில் பல்கிளை கறங்க’ - நற்: 42, 1-4

'உயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி; அதனால்
பசியுடை ஒக்கலை ஒரீஇய
இசைமேந் தோன்றல்!' -பதிற்றுப்: 64:17-20

'இரப்போர்க்கு
இழையணி நெடுந்தேர் களிறொடு என்றும்
மழைசுரந் தன்ன ஈகை’ - அகம்: 238:11-13

'நச்சியார்க்கு ஈதலும் ...
......................................................போல்
எச்சாகும் மின்னும் மழை’ - கார்: 7: 1-4

‘செப்பம் உடையார் மழையனையர்’ - திரிகடு : 83 : 3

'மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வதுஎன் ?'
....................................................................................................
செய்யார் எனினும் தமர்செய்வர்; பெய்யுமாம்
பெய்யாது எனினும் மழை’ - பழமொழி: 109:13,4

'சேறுசெய் மாரியின் அளிக்கும் நின்
சாறு படு திரு’ - பதிற்று:65:16,17.

'நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள' - பரி: 4:27

'மாரி யன்ன வண்மையில் சொரிந்து' - புறம்: 397: 16

‘சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம்' - நாலடி : 232: 1-2

'பிறர்க்குதவி செய்வார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறுஆம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு' - நன்னெறி : 4

இனி மாரிபோல் இல்லார்க்கு ஈந்து மகிழ்ந்த செல்வர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் ஆகியோரை அற்றைப் புலவோர்கள் மாரியோடு இணைவைத்துப் பண்பு பாராட்டிய பாக்கள் பற்பல. அவற்றுள்