பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

117



எடுத்துக் காட்டாக ஒருசில கண்டு மகிழ்க

‘பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே - புறம் 107:3-4

‘மாரிஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்’ - பழமொழி: 17:13

‘மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!' - புறம்:133:6-7

- கைம்மாறு - செய்ந்நன்றிக்கு நன்றி செய்தல் - எதிர் நன்றி.

- பிறர்பால் நன்றி எதிர்பாராத பொதுவறம் கருதுதல் வேண்டும் என்றார்.

'கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தி
தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மா!
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் சென்று’ - நன்னெறி : 27

கொல், ஓ - அசைகள்

4) இஃது ஒப்புரவறிதல் உணர்வுக்கு விளக்கமாக அமைதலின் அதிகாரத்து முன்வைத்துக் கூறினார் என்க.


உகஉ. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு - 212

பொருள்கோள் முறை: இயல்பு

பொழிப்புரை : பொதுமை நலம் கருதும் ஒர் அறவாணனுக்கு அவன் செய்கின்ற தாழாத முயற்சி ஈட்டித் தந்த பொருள்யாவும், அவன் தகுந்தவர்களுக்கு அவற்றைக் கொடுத்து உதவுதல் பொருட்டேயாம் என்க.

சில விளக்கக் குறிப்புகள்:

1) தாள்ஆற்றித் தந்த பொருள் எல்லாம்: பொதுமை நலம் கருதும் ஒர் அறவாணனுக்கு அவன் செய்கின்ற தாழாத முயற்சி ஈட்டித்தந்த பொருள்யாவும்,

- 'பொதுமை நலம் கருதும் ஓர் அறவாணனுக்கு' என்னும் எழுவாய்,