பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

அ-2-18 ஒப்புரவறிதல் 22


அதிகாரத்தான் வருவிக்கப் பெற்றது.

- தாள் ஆற்றித் தந்த: அவன் செய்கின்ற தாழாத முயற்சி ஈட்டித்தந்த,

- தாள் - முயற்சி, தாழாத முயற்சி.

- இதைத் தாளாண்மை என்றும் குறிப்பிடுவார். - (613, 614)

'தாளுளாள் தாமரையினாள்’ - (617)

'தாள் தந்தது’ - (1065)

'தாள்' காலடியைக் குறிக்கும் இச்சொல் (2, 7, 8) அக் கால்கள் இங்கும் அங்கும் சென்று செய்கின்ற முயற்சியையும் குறித்த தென்க இது சினையாகு பெயர். முதலில் உழைப்பைக் குறித்தது. பின் உழைப்புக்கான முயற்சியையும் குறித்தது.

ஆற்றித் தருதல் : ஈட்டித் தருதல். உழைக்கின்ற உழைப்பு முயற்சி ஈட்டித் தருவது.

- பொருள் எல்லாம் : செல்வத்தின் வழியின எல்லாம். பொருள் சொத்து முதலிய உடைமைகள் அனைத்தையும் குறித்தது.

- இதன்வழி, பொதுமை நலம் கருதும் ஒருவன், முயற்சி செய்து பொருளீட்டுதல் வேண்டும் என்று வலியுறுத்தினார்.

- தான் ஈட்டிய பொருளிலேயே ஒருவர்க்கு உதவுதல் வேண்டும் என்பது, குறிப்பு.

- மற்று தான் முயற்சி செய்யாமல் வந்த பொருளைப் பிறர்க்குக் கொடுத்தல் அத்துணைச் சிறப்பின்றாம், என்றார்.

- அது. 'கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையார்க்கு உடைத்தல்' என்னும் நாட்டுப் பழமொழிப் படி சிறப்பிலதாம் என்றார். 'ஊரான் வீட்டு நெய்யே தன் பெண்டாட்டி கையே' என்னும் பழமொழிக்கேற்பவும், அக்கொடையில் பொருள் வருத்தம் தெரியாதென்க.

'ஆற்றின் வருந்தா வருத்தம்’ . - (468)

என்பார், அதனை.

- மேலும், தான் தன் முயற்சியால் ஈட்டாது வந்த பொருள், ஆரவாரக் கொடைக்கே பயன்படுவதன்றித் தக்கார்க்கு அது போற்றி ஒழுகப்படாது என்றவாறு, என்னை? .

' ஆற்றின் அளவறிந்து சக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி’ - (477)