பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

135



- முன்னைய குறளில் பேரறிவாளன் செல்வத்தை விடாய் தணிக்கும் நீராகக் கூறியவர், இதில் நயனுடையான் செல்வத்தைப் பசிதணிக்கும் பழமாகக் கூறிய நயம் கண்டு மகிழத்தக்கது.

- ஆல் அசை,

- நயனுடையான் கண் செல்வம் வந்துசேரின், அது பழுமரம் போல் பயன்படும் என்னும் கருத்தைச் சான்றோர் பிறரும் கூறுதல் காண்க.

'அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழல்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்’ - நாலடி : 202

'முன்னூர்ப் பழுனிய கோளி யாலத்துப்
புள்ளார் யாணர்த்(து) அற்றே என்மகன்
வளனும் செம்மலும் எமக்கு’ - புறம் 254:7-9

‘உதவுமாடுயர் பார்கெழு பயன்மரம் பழுத்தற் றாகவும்' - கம்ப.அயோத்தி.மந்திரம்:82

‘மற்றவண் உள்ளபன் மரமும் தம்பயன்
எற்றையும் உலப்புற(து) ஈகை சான்றவே’ - கந்தபுராணம்

‘பழுமரத்து ஈண்டிய பறவையின்’ - மணி. 14:26

‘பழுமரம் முன்னிய பறவையின்' - பெருநர். 64

‘பழுமரம் தேரும் பறவைபோல’ - பெரும்பாண்.20

'நடுவூருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படுபனை யன்ன பலர்நச்ச வாழ்வார்’ - நாலடி 96:1-2

‘பழுமரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்’ - நாலடி:202:23

'அருஞ்சுரத்தின் மரம்போல அடைந்தார்க் களித்தல்
அவற்கியல்பு’ - சீவக:3 நச். உரை.

3) முன்குறளில் ஒப்புரவு உணர்வுடையான் பேரறிவாளன் என்று கூறி, அவன் செல்வம் அனைவர்க்கும் பயன்படுதலை ஒர் எடுத்துக் காட்டான் கூறியவர், இதில் அத்தகையவனை நடுநிலையாளன் என்று விதந்துகூறி, அவனுடைய செல்வப் பயனையும் மற்றுமோர் எடுத்துக்காட்டால் கூறி வேறு வகையில் விளக்கியதால், அதன்பின் இது வைக்கப் பெற்றது.