பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

143



‘ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்’ - 673

‘வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று’ - 955

‘மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்’ - 973

‘பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்’ - 975

‘ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்’ - 989

5) செல்வம் மிக்கிருந்த காலை செய்யப்பெறும் ஒப்புரவாண்மை அறத்தை விரும்பி மேற்கொள்ளும் தன்மையினார் பற்றி முன் மூன்று பாடல்களில் பேசியவர், அது குறைந்த காலத்தில் அத்தகையவர் எவ்வாறு நடந்துகொள்வர் என்று இதில் கூறுவதால், அவற்றின் பின்னர் இது வைத்தார்.


உகசு . நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. - 219

பொருள்கோள் முறை: இயல்பு'

பொழிப்புரை: நடுநிலையான பொதுமை நலம் கருதுபவன் வறுமையுற்றான் என்பது, அவன் பிறர்க்குச் செய்து வந்த பொதுநலக் கொடைகளைத் தன்னால் செய்ய இயலாமல் மனம் வருந்துகின்ற நிலையே.

சில விளக்கக் குறிப்புகள்:

1) நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல்: நடுநிலையான பொதுமைநலம் கருதுபவன் வறுமையுற்றான் என்பது :

நயனுடையான் :நடுநிலையான பொதுமை நலம் கருதுபவன்.

நல்கூர்ந்தான் ஆதல் : வறுமையுற்றான் என்று ஆவது

- அஃதாவது வறுமைநிலை அடைந்தான் என்பது.

- அவன் வறுமையுறுவது பிறர் வறுமையுறுவது போல் இல்லை. அதற்கு