பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

அ-2-19 ஈகை 23


மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே’ - புறம்:22:31-34

'ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்' - புறம்:2:15, 16

'ஒர்ஐவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன்' - சிலப்:29:2,3

‘பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே’ - புறம்: 221 :1

‘ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன் றதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று’ - புறம்:204:1-4

‘அரசுவரின் தாங்கும் வல்லா என்னே’ - புறம்:327.8

‘ஈதல் ஆனா விலங்குதொடித் தடக்கை' - புறம்:337:5

(ஆனா தவிராத)

‘தனக்கென வாழாப் பிறர்க்குரிய யாளன்’ - அகம்:54:13

இவை போலும் ஈகைச் சிறப்புரைக்கும் சான்றுகள், நம் கழக இலக்கியங்களுள் நூற்றுக்கணக்கில் பரந்திலங்குகின்றன. விரிவான விளக்கங்களை அவற்றுள் கண்டறிக

ஈகையின் வகை:

- இனி ஈகை யறத்தைச் செய்த அரசர்களும், பொருளுடைமைப் பெருஞ்செல்வர்களும், என்னென்ன அற உணர்வுகளிலும், மனநலம் கொண்ட பெருமித மாட்சிமைகளிலும் அதனை மேற்கொண்டார்கள் என்பதை அவ்வீகைத் தன்மையைப் பெருமைப்படுத்திப் புலவர்கள் புகழ்ந்து கூறிய கூற்றுகளினின்று தெளிவாக அறிதற்கியலும்.

இந்நிலை, இவ்வறத்தை அவர்கள் எத்துனைப் பொதுமை நோக்கோடும் முழு விருப்பத்தோடும் மகிழ்வோடும் கரவின்றிச் செய்தார்கள் என்பதை நாம் உணர்தற்குப் பெரிதும் பயன்படுவதாகும்.

கீழே காட்டப்பெறும் எடுத்துக் காட்டுகளுள், ’ஈகை’ என்னும் சொல்லுக்குத் தரப்பெற்றிருக்கும் சிறப்பு அடைச் சொற்கள் ஆழமான பொருளுடையவை. அவை, அவ்வீகையாளரைப் பெருமைப் படுத்தும் வகையிலும், அவ் வீகைத் தன்மையைச் சிறப்பிக்கும் வகையிலும் புலவர்களால் புகலப் பெற்றவை.

அவற்றை ஒரு திரட்டாகப் பார்க்கின்ற பொழுதே