பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

அ-2-19 ஈகை 23


அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும், சுரும்புண
நறுவி யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல்
பறம்பிற் கோமான் பாரியும், கறங்குமணி
வாலுளைப் புரவியொடு வையகம் அருள
ஈர நன்மொழி இரவலர்க் கீத்த
அழல்திகழ்ந் திமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கைக் காரியும், நிழல்திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
மாமலர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவத் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும், மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை திங்கனி ஒளவைக் கீத்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும், கரவாது
நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும், நளிசினை
நறும்போது களுலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .எழுவர்.”
- சிறுபாண்: 84-113


இவர்தம் முழுப்பெயர்களும் விளக்கமும்:

1) பாரி: - இவன் முந்நூறு ஊர்களையுடைய பறம்பு நாட்டிற்கும் பறம்பு மலைக்கும் உரியவன். தன் முந்நூறு ஊர்களையும் பறம்பு மலையையும் பரிசிலர்க்கே கொடுத்த பெருங்கொடை வள்ளல். 'கொடுக்கிலாதானைப்