பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

அ-2-19 ஈகை 23


ஆசாகு எந்தை யான்டுளன் கொல்லோ
இனிப் பாடுநரும் இல்லை
பாடுநர்க் கொன்று ஈகுநரும் இல்லை
பனித்துறைப் பொன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்று
ஈயாது வியும் உயிர்தவப் பலவே’ - புறம்:235

இதன்பொருள்:

(சிறிய அளவு கள்ளைப் பெறின் எமக்குத் தருவான். பெரிய அளவு கள்ளைப் பெறின், அதை யாம் உண்டு பாட எஞ்சியதைத் தானும் உண்டு மகிழ்வான். சோறு எல்லார்க்கும் பொதுவாகையால், சிறு அளவுடைய சோற்றினையும் மிகப் பல கலங்களுடன் அனைவருடனும் உண்டான். மிகுந்த அளவு சோற்றுடனும் மிகப் பல கலங்களுடன் அனைவருடனும் உண்பான். . . . . நரந்தம்பூ மணக்கும் கையால், புலால் நாறும் எம் தலையை அன்புடன் தடவிக் கொடுப்பான்.

அரிய தலைமையையுடைய பெரிய பாணரின் அகன்ற மண்டையினைத் துளைத்து உருவிக்கொண்டு, இரப்பவர் கைகளையும் தைத்து உருவி, அவனால் புரக்கப்படும் சுற்றத்தாரின் கண்களின் விழிப்பாவைகளையும் தைத்து ஒளிமழுங்கச் செய்து அழகிய சொற்களை ஆராயும் நுண்ணிய ஆய்வறிவுடையோர் நாவின் கண் போய்த் தைத்து நின்றது. அவனுடைய அழகிய மார்பகத்தில் தைத்த வேல். எமக்குப் பற்றுக் கோடாகிய எம் இறைவன் எவ்விடத்துள்ளானோ?

இனிப் பாடுபவர்களும் இல்லை. பாடுபவர்களுக்கு ஒன்று ஈவாரும் இல்லை. குளிர்ச்சியுடைய நீர்த்துறையின்கண், பெரிய அளவு தேனைக் கொண்ட பெரிய பகன்றை மலர், பிறரால் சூடப் பெறாது வீணே வாடிக் கழிந்ததுபோல, பிறர்க்கு ஒன்றை ஈயாமல் மாய்ந்து போகின்ற உயிர்கள் மிகவும் பலவாம்)

5) பேகன்: இவனுடைய முழுமையான பெயர் வையாவிக் கோப்பெரும்பேகன் என்பது. மலைநாட்டை உடையவன். ஆவியர் குடியைச் சேர்ந்தவன். இவனது ஊர் நல்லூர் என்பது. இவன் காட்டின்கண் சென்றிருந்த பொழுது, மயில் ஒன்று ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டு, அது குளிரால் நடுங்குவதாகக் கருதி (மயில் ஆடுவது குளிரில் நடுங்குவது போல் இருக்கும்) அதன்மேல் தன் விலையுயர்ந்த, மணிகள் இழைத்த பட்டுப் போர்வையைப் போர்த்து வந்தான். அதனால் இவனையும் கொடைமடம் பட்டவனாகப் புலவர் கூறுவர். இவனைப் பரணர், கபிலர், வன்பரணர், அரிசில் கிழார்,