பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

அ-2-19 ஈகை 23


பெருமை பொருந்திய அரசர் அணுகுதல் அரிது)

'தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்
ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று
வானம் மீன்பல பூப்பின் ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றி
பெருவெள் என்னின் பிழையாது மன்னே - புறம்:129:4-9


இதன்பொருள்:

(இன்சுளை நிறைந்த பலா மரங்களையுடைய பெரிய மலைக்கு உரிய ஆய் அண்டிரன், கொல்லும் போரைச் செய்யும் தலைவன், இரப்போர்க்குக் கொடுத்த யானைகளின் எண்ணிக்கைக்கு, மேகம் மறைக்காத வானத்தில் பூக்கின்ற வின்மீன்களின் எண்ணிக்கையும், ஈடாகாது. வானில் ஒர் இடத்தும் கருமையில்லாதபடி வானம் முழுவதும் வெளிர்ஆகும்படி மீன்கள் பூக்குமாயின் ஒருவேளை அது பொருந்தலாம்)

‘விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்துஈ னும்மோ
நின்னுநின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்துநீ யளித்த
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
குடகடல் ஒட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே’ - புறம்:130


இதன்பொருள்:

(விளங்குகின்ற மணிகளால் ஆகிய ஆரத்தை உடைய ஆயே! உன்னாட்டில் இளைய பெண்யானை ஒரு கருவில் பத்துக்குட்டிகளைப் போடுமோ? உன்னையும் உன் மலையையும் பாடி வருபவர்களுக்கு இனிய முகத்தை ஒளியாது மகிழ்ந்து நீ கொடுத்த தலைமை யானைகளை எண்ணிப்பார்ப்பின், கொங்கரை மேற்குக் கடல்வரை நீ ஒட்டினாயே, அப்பொழுது செலவிட்ட வேல்களை விட மிகுதியாகவே இருக்கும்)

‘தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே - புறம்:132:8-9

 'மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற்