பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

அ-2-19 ஈகை 23



'நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி
வரஎமர் மறந்தனர் அதுநீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே’ - புறம்: 149

'புன்றலை மடப்பிடி பரிசிலாகப்
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீ ரக்கோ’ - புறம்:151:4-6

'ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஒட்டிய நள்ளி’ - புறம் :158:14-16

இங்குக் காட்டப் பெற்ற கழக எழுவள்ளல்களின் வரலாறும், அவர்களின் தாழா ஈகைத் தகைமாண் சிறப்புகளைக் கூறும் ஒருசில பாடலடிகளும், பழம்பெருந் தமிழகத்தில் எத்துணை வளம் பெருகியிருந்த தென்பதையும், அவற்றை உடைய அறம் வளர் நெஞ்சின் மறந்திகழ் வேந்தரும் வேளிரும் எத்துணையளவு ஈகையறத்துச் சிறந்து விளங்கித் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராகத் திகழ்ந்தனர் என்பதையும் ஒருவாறு உணர்த்தின.

ஈகை இயலாதார்: இனி, ஈகையறத்தைச் செய்ய விரும்பியும் தமக்குற்ற ஏலாமையால் பொருள் நலிவு கொண்டவர் உலகமும் அன்றிருந்தது என்பதையும் அறிதல் வேண்டும். நல்கூர்ந்தார்க்கு அறங்கூர்தல் இல்லையாகுதல் இயல்பே என்க. எனவே அது தொடர்பான சில கருத்துகளையும் இவ்விடத்து நினைவு கூர்தல் இருவேறு உலகத்து இயற்கை நிலையை நன்கு விளங்கிக் கொள்ள உதவும் என்க.

'இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள்நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருளில் லோர்க்(கு)அஃது இயையாது - அகம்:335:1-3

'இல்லாதான் ஒல்லாப்பொருள் இலார்க்கு ஈந்தறியான்’

- சிறுபஞ்:3:3


‘ஈதல் தீது என்பிலார்க்கு’ - சிறுபஞ்ச:59:1

‘பிச்சை எனக்கை அகலேந்திக்