பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

அ-2-19 ஈகை 23



உஉக. வறியார்க்(கு)ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர(து) உடைத்து. - 221

பொருள்கோள் முறை: இயல்பு

பொழிப்புரை: வறுமை உடையவர்க்குத் தம்மால் இயன்ற ஒன்றைத் தருவதே ஈகை ஆகும். மற்றக் கொடையெல்லாம் பெற்றவர் திருப்பிச் செலுத்தும் குறித்த எதிர்ப்பை உடையதாகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1) வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை : வறுமை உடையவர்க்குத் தம்மால் இயன்ற ஒன்றைத் தருவதே ஈகை ஆகும்.

வறியார்: வறுமை உடையவர்.

வறுமை - இல்லாமை,

பொருள் இல்லாமை.

நுகர்வு இல்லாமை.

- ஒன்று. தம்மால் இயன்ற ஒன்று. - இதற்குப் பலரும், 'அவர் வேண்டியது ஒன்றை' என்றே பொருள் கூறுவர். - ஒன்றும் இல்லாத ஏழை எதை வேண்டினும் தருவது என்பது எல்லார்க்கும் இயல்வதன்று.

- வறியவன் என்பவன் தம்மினும் இல்லாதவன். அவனுக்குக் கொடுப்பவன் எல்லாவற்றாலும் நிறைந்தவன் என்று எதிர்ப்பாக்க இயலாது. இருந்து கொடுப்பின் தவறில்லை. கொடுப்பவனிடம் இல்லாத ஒன்றை வறியவன் கேட்பின் அவனால் தர இயலாதன்றோ. எனவே இயன்ற தன்னால் முடிந்த ஒன்றை அவனுக்குத் தருவதே இயல்வதும், உலகியலும் ஆகும் என்க. அந்த அளவு செய்தலே அறமாகும். இயலாத ஒன்றைச் செய்ய முடியாமல் மறுத்தலைவிட அல்லது இல்லை என்று கூறுவதைவிட, இருக்கின்ற ஒன்றைத் தருவதே சாலும் என்க. என்னை? ஓர் ஏழை, மற்றொருவனிடம் உணவுப் பொருள்கள் வாங்க ஒரு தொகை கேட்பின், அத்தொகை முழுவதும் தன்னிடம் இல்லாத ஒருவன், அவன் கேட்பதில் அரைப்பங்கோ காற்பங்கோ தர இயலுமெனின் அதைத் தருவதே சிறப்பாம். அல்லது தன்னிடம் தொகை இல்லாத நிலையில், தன் பயன்படுத்தத்திற்கு வைத்திருக்கும் உணவுப் பொருள்களைத் தருவதிலும் குற்றமில்லை யென்க.

- எவ்வாறானும் ஒருவனுக்கு இயன்றதைத்தான், கேட்பவனுக்குத் தர முடியுமே தவிர, அவன் விரும்பியதைத் தருவது அவனினும் பல