பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

183


எனினும் கொளல் தீது: என்றாலும்கூடப் பிறரிடமிருந்து பொருள் பெறுவது தீமைதரும்.

- கொளல் என்றல், தாமாக வருவதைக் குறிக்கும்.

- அதைக் கொள்வதே தீது என்றதால் கேட்டுப் பெறுவது அதனினும் தீது என்று குறிப்பு உணர்த்தினார் என்க.

- தீது - தீமை - என்றது, கொடுக்கப்பெறும் பொருள் தவறாக ஈட்டியதாகவும் இருக்கலாம் ஆதலால் அறச்செயலுக்கே இழுக்கு ஏற்படலாம் என்றவாறு.

- அரசுப் பதவியில் உள்ளவர்கள் இவ்வாறு ஈட்டுகின்ற நன்கொடைகள் எவ்வாறான ஈட்டத்திலிருந்தும், கட்டாயப் படுத்தப் பெற்றும், அச்சத்தாலும் கொடுக்கப் பெறுபவை என்று எண்ணிப் பார்த்தால் தீமை விளங்கும். இத்தீமை ஆட்சி இயக்கத்திற்குப் போய் மக்கட்குக் கேடாக முடிகிறது என்பதையும் உய்த்துணர்க.

- இதுபோன்றதே தனிநிலைக் கொடைகள் திரட்டுவதும் அல்லது பெறுவதும் என்க.

- இது தொடர்பாக ஆசிரியர் வேறு இடங்களிலும் கூறுவார்.

'இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்' - 361

‘ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்' - 1066

இக்கூற்றுகளால் அறச் செயல்கள் கூடத் தன் முயற்சியால் செய்யப்படவேண்டுமே தவிர, இரந்து பெறுதலோ, அல்லது ஏற்றுச் செய்தலோ கூடா என்றார் என்க.

'ஏற்பது இகழ்ச்சி ', - ஆத்திசூடி:8

'என்பெறினும் கொள்ளற்க, கொள்ளார் கைமேல்பட' - நான்மணி: 1:2

'அறம்செய் பவற்கும் அறவழி நோக்கித்
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்றாம்' - பழமொழி:159:1-2

'நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்' - புறம்:195:6-7

'கண்ணிற் சிறந்தார் தம்மிடத்தும்
காழ்த்த மானம் கெடநாவால்