பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

அ-2-19 ஈகை 23


பண்ணற் குரிய அறம்குறித்தும்
படர்ந்தொன்(று) இரவார் பெருமையினால்’ - விநாயக அரசி:154

‘கரவாத திண்ணன்யின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவின்
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வர் குறிப்பு’ - நாலடி:305

‘. . . . . . . . . . . . . . . . . . . . . . . .வறுமையால்
ஈதல் இசையாது எனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்’ - நாலடி:95

2) மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று:

மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்கு ஈவதே நல்லது.

மேலுலகம் : மேலே இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் விண்ணுலகம். அஃதாவது துறக்க (மோட்ச) உலகம்.

- இதுபற்றி முன்னரே பல விடங்களிலும் விளக்கப் பெற்றுள்ளது.

- புத்தேளிர் வாழும் உலகு (58), அகல் விசும்பு உளார் (25), அவர்களின் தலைவன் இந்திரன் (25) என்பவெல்லாம் அவ்வுலகத் தொடர்பான செய்திகளே.

- மேலுலகம் என்னும் சொல் இந்நூலுள் இங்கு ஒரே இடத்தில் மட்டுந்தான் பயிலப் பெற்றுள்ளது.

- இச்சொல் பிற கழக இலக்கியங்கள் எங்கணும் பயிலப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இடைக்கால இலக்கியமான ஏலாதி என்னும் நூலில் மட்டுமே மேலுலகம் ஓரிடத்தில் வந்துள்ளது.

அது

‘ஊறுபா டில்லா உயர்தவம் தான்புரியின்
ஏறுமாம் மேலுலகம் ஒர்ந்து - ஏலாதி:65:4

- இது தவிர, 'மேலோர் உலகம்' என்னும் இணைச் சொற்களைப் புறநானூற்றில் ஈரிடங்களில் காண முடிகிறது.

அவை,