பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

அ-2-19 ஈகை 23



உஉரு ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின். - 225

பொருள்கோள் முறை இயல்பு

பொழிப்புரை: தவம் இயற்றுவாரது ஆற்றல் தம் பசியைப் பொறுத்துக் கொள்வதே ஆகும். அது, தன் பசியையும், தன்னை நாடி வந்தார் பசியையும் உணவிட்டுத் தீர்ப்பாரது ஈகையாற்றலுக்குப் பின்னதே ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் : தவம் இயற்றுவாரது ஆற்றல் தம் பசியைப் பொறுத்துக் கொள்வதே ஆகும். ஆற்றுவார். தவம் செய்பவர். ஆற்றுதல்’ என்னும் சொல்லும், ஆற்றுவார் என்னும் சொல்லும் இந்நூலுள் பல விடங்களில் பல பொருள்களில் பயன்படுத்தப் பெறுகின்றன.

- அவை, செய்தல், செய்பவர், செய்யும் திறனுள்ளவர், வல்லவர், ஆற்றலுடையவர் பொறுத்துக்குக் கொள்பவர் என்னும் பொருள்களில் வந்துள்ளன.

- இவ்வோரிடத்தில் மட்டுந்தான் ஆற்றுவார் என்னும் சொல் தவம் செப்பவர் என்னும் பொருளில் வந்துள்ளது. அப்பொருள் கொள்ளங்ம துணையாயிருப்பது, பசிஆற்றல் என்னும் இணைச்சொல். - பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார் காலிங்கர், பாவாணர்

அனைவரும் தவம் செய்பவர் என்றே பொருள் கொண்டனர். வேறு சிலர் வேறு வகையாகப் பொருள் கொண்டுள்ளனர். அது பொருந்தாது, என்க.

ஆற்றல் பசியாற்றல்; அவர்களது ஆற்றல் பசியைப் பொறுத்துக் கொள்வதே

- - - - தவம் செய்பவர் பிறர்போல் உண்ணுதல் செய்யாது, பெரும்பாலும் உண்ணா நோன்பிகளாக இருப்பதால், அவர்கள் பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவர்களாக இருப்பர் என்னை?

‘உண்ணாது நோற்பார் பெரியர்’ - 160 ‘உற்ற நோய் நோன்றல்’ – 26 :

என்று வருவன உண்ணாமையையும் பசிபொறுத்தலையும் குறித்தன.