பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

193


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 193

- எனவே, ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்’ என்னும் தொடர்க்குத் தவம்

இயற்றுவார் ஆற்றல் பசியைப் பொறுத்துக் கொள்வதே ஆகும் என்று பொருள் கொள்வதே சிறந்ததும் பொருந்துவதுமாம் என்க.

- இத்தொடர் போல் ஆசிரியர் வேறு இரண்டு இடங்களிலும்

அமைத்துள்ளதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை’ - 89 ஆற்றுவார் ஆற்றல் பணிதல்’ ~ 985

- ஆனால், அவ்விரண்டு இடங்களிலும், ஆற்றுவார் என்னும் சொல்

செயல் முடிக்கும் திறனுடையவர் என்றே பொருள் பட்டு நிற்கும்.

- ஏனெனில், அச்சொல் தவம் செய்பவரைக் குறிக்குமாறு இயைபான

வேறு துணைப்பொருள் தரும் சொல்லோ, சொற்களோ இல்லை யாகலான், என்க.

2 அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்:

அவ் வாற்றலானது, தன் பசியையும் தன்னை நாடி வந்தார் பசியையும்

உணவிட்டுத் தீர்ப்பாரது ஈகையாற்றலுக்குப் பின்னதே ஆகும்.

அப்பசியை மாற்றுவார் : அப்பசியை உணவு இட்டுத் தீர்ப்பார். இல்லாமல் செய்வார்.

- பசியை மாற்றுவது உணவாகலின், உணவிடல் வருவிக்கப் பெற்றது.

- பசிநோய் என்றும் பிணி என்றும் பலவாறாகக் கூறப்பெற்றது முன்னரே

--

விளக்கப் பெற்றது. (குறள் எண்.217 இன் விளக்கவுரை காண்க

எனவே, பசியே ஏனைய துன்பங்கள் அனைத்தினும் கொடுமையான தாகலின் அதைத் தீர்ப்பது அல்லது ஆற்றுவதே பேரறமாகக் கொள்ளப்படும். அதற்கு உதவுபவனே பேரறவாணன்ாக மதிக்கப் பெறுவான். என்னை? .

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே! உண்டிமுதற்றே உணவின் பிண்டம்!

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே! - புறம்:18:18-21 மக்கள் யாக்கை உணவின் பிண்டம் மணி:10:90 ‘மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே - மணி:10:90

- என்றார் ஆகலின்.