பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

197


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 197

‘அறத்தால் வருவதே இன்பம்; மற்றெல்லாம்

புறத்த புகழும் இல்’ - 39 ‘அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் - 46

‘இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை’ - 47 முயல்வார் - தவமுயற்சி உடையவர்) ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து’ - 48

நோற்பார் - தவம் செய்பவர்)

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்’ - 88 (பற்றற்றார் - தவம் செய்யும் துறவியர்)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்’ - 159 ‘பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ - 322 வேண்டின் உண்டாகத் துறக்க, துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல - 342

- எனவே, மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் பெறப்படும் மேலான உண்மையே, தனக்கென முயலும் தவத்தினாரைவிடப், பிறர்க்கென முயலும் ஈகையறம் செய்வார் மேலானவர் என்பதே, என்க. - அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் என்பது போலவே வேறு சில இடங்களிலும் ஆசிரியர் தவம் நோற்கும் துறவியரைவிட உயர்ந்தவராக - சிறந்தவராகச் சிலரைச் சுட்டுவர். -

‘உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் - இன்னாச்சொல் நோற்பாரின் பின்’ - #60 ‘மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை’ - 295 - இவற்றுடன் மேலே கூறிய 47, 48,159 - ஆகிய வாய்மை உரைகளும்

தவம் மேற்கொள்பவரைப் பின்தள்ளியே பேசுவதைக் காண்க