பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

199


தவம் என்று, இல்லறத்தாரை இழித்துக் கூறிய நாயனார், இக்குறளில் இல்லறத்தாரை உயர்த்திக் கூறிய தென்னெனின்,

‘ஏறடர்த்து வின்முருக்கி
எவ்வுலகும் கைக்கொண்டு,
மாறடர்த்த வாழி
வலவனைக் - காறொதற்
கெஞ்சினார் இல்லெனினும்
மாய னிகனெடுமால்
வஞ்சியா னிர்நாட்டார் மண்’

என்னும் செய்யுளில், ஒருவகைக் குணம் பற்றிச் சோழனைத் திருமாலுக்கு மேம்பட்டவன் என்று சொன்னாலும், அச்சோழன் எங்ஙனம் காவற்கடவுளாய திருமாலுக்கு உயர்ந்தவன் ஆகானோ அங்ஙனமே, பிறரது பசியைப் போக்கும் நிமித்தம் பற்றி இல்லறத்தாரைத் துறவறத்தார்க்கு மேம்பட்டவரென்று சொன்னாலும், அவர் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும், வேண்டிய வேண்டியாங் கெய்தலும், தன்னுயிர் தானறப் பெறலும், கூற்றங்குதித்தலு முடைய துறவறத்தார்க்கு மேம்பட்டவராகார் என்க’ என்பதாம்.

- துறவியரை உயர்த்தியும், இல்லறத்தாரைத் தாழ்த்தியும், நூலாசிரியப் பேராசானையே திரித்துக் காட்டும் தேவை, ஆரியப் பார்ப்பனர்க்கும் இல்லாதவாறு, வடிவேலர்க்கு ஏன் வந்துற்றதோ, அறியலம். அதற்கவர் அறிவு முட்டுப்பாடே காரணம் ஆயினும் ஆகலாம், என்க.

3) தான் பொருள் நிலையில் தாழ்ச்சியுறுதலும் கருதாதவாறு, இரக்கப்படும் பெருமை சான்றவர், தவஞ்செய்வாரையும் விட உயர்ந்தவர் என்னும் கருத்துப்பட இது கூறியதால், முன்னதன் பின்னர் இதனை இறுத்தினார் என்க.

உஉசு. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

- 226

பொருள்கோள் முறை:

அற்றார் அழிபசி தீர்த்தல்; அஃது

பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி.