பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

201


வைப்பு உழி : வைப்புழி பொருளைச் சேமித்து வைக்கும் இடம்.

உழி: இடம்

'இழுக்கல் உடையுழி'
- 415

-::செல்வம் பெற்றவன் ஒருவன் அதைச் சேமித்து வைப்பதற்குரிய இடமாக, அற்றார் அழிபசி தீர்த்த செயலைக் கருதுதல் வேண்டும் என்றார் என்க.

- அறம் செய்வான் ஒருவனுக்கு அவ்வறமே அனைத்துக்கும் பாதுகாப்பாக வந்து அமையும் என்று முன்னருங் கூறினார்.

'அன்றறிவாம் என்னா(து) அறஞ்செய்க; மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை'

- 36

என்றார் என்க.

- அக்குறள் விளக்கத்தின்கண் அறம் எவ்வாறு ஒருவனுக்குப் பொன்றுங்கால் பொன்றாத் துணையாய் வந்து நிற்கும் என்பது விளக்கப் பெற்றது.

- அதேபோல், அற்றார்க்கு அழிபசி தீர்த்தானுக்கு, அவன் இறுதிநிலையில், அவனிடத்து நன்றிபெற்றவர் அனைவரும், அவன் ஈகையுணர்வு கேட்டார் பலரும், அவனுக்கு எல்லா நிலையிலும் துணையாக வந்து நின்று இயங்குவர் என்க. அக்கால் அவன் முன்பு இரவலர் பொருட்டாகச் செலவிட்ட பொருள் நிலைக்கு மேலாக அவனுக்கு உதவிகள் வந்து சேரும் என்பதுணர்த்தவே அவன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாக, அவன்பால் உதவி பெற்றானாக் கூறினார் என்க.

என்னை?

‘இணைத்துணைத்(து) என்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்’
- 87

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்’ .
- 104

‘எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு’
- 107

‘கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் கற்றப் படும்
- 525

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு”
- 994

என்பார், ஆகலின்.