பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

203


4) சென்ற குறளில் பசிக்கு உணவிடுவார் உயர்வைக் கூறியவர் இதில், அத்தகையவரின் அறப்பயனைக் கூறியதால், அதன்பின் இது வைக்கப் பெற்றது.

உஉஎ. பாத்துரண் மரீஇ யவனைப் பசிஎன்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.
– 227

பொருள்கோள் முறை: இயல்பு

பொழிப்புரை: என்றும் தனக்குக் கிடைக்கும் உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணும் பண்பு தழுவியனைப் பசி என்னும் தீய பிணி அண்டுவதில்லை.

சில விளக்கக் குறிப்புகள்:

1) பாத்துஊண் மரீஇயவனை : என்றும் தனக்குக் கிடைக்கும் உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்து பண்பு தழுவியவனை. பாத்து ஊண் பகிரப் பெற்ற உணவு. உணவைப் பகுத்து உண்ணுதல்.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்’
- 322

என்பார் ஆசிரியர்.

பகுத்து-பாத்து -இடைக்குறைந்து நீண்டது. பாத்து-பாத்தி - வரம்பிடப் பெற்ற நிலம்.

“பழியஞ்சிப் பாத்துண் உடைத்தாயின்
- 44
‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்’
-1107

மரீஇயவனை: மருவியவனை, தழுவியவனை - பழகியவனை.

- பண்பு தழுவியவனை.

- பகுத்துண்ணுதல் ஒரு பண்பாதலின் 'பண்பு தழுவியவனை' எனவாயிற்று.

பாத்துண்பான் ஏத்துண்பான் பாடு
- ஏலாதி:44:4
'பஞ்சப் பொழுதில் பாத்துண்பான்....

......................................